கஞ்சி காய்ச்சத்
தெரியவில்லை
301 ரூபாய் பரிசம் போட்டுக் கட்டின மனைவி. அவளுக்குக் கஞ்சி
காய்ச்சத் தெரியவில்லை. அலுத்து வந்த நேரத்தில் கஞ்சியாவது ஊற்ற வேண்டாமா? இந்த
உதவாக்கரை பெண்ணைப் பார்த்துக் கணவன் சொல்லுகிறான்.
முன்னூத்தி ஒண்ணு வாங்கி
முடிஞ்சு ஙொப்பன் வச்சிக்கிட்டான்
கஞ்சி காய்ச்சத் தெரியலேன்னா-உன்
கழுத்தக் கட்டி நானழவா
வட்டார வழக்கு
:
ஙொப்பன்-உங்கள் அப்பன்.
சேகரித்தவர்
:
S.M.
கார்க்கி |
இடம்
:
சிவகிரி,
நெல்லை மாவட்டம். |
|