நடுச்சாவி ஆனதுவே!
(மலடி)
முன்னரே மலடியின் புலம்பலைக் குறித்து குறிப்பு எழுதியுள்ளோம்.
இவள் தன்னைக் காய்க்காத தென்னைக்கு ஒப்பிடுகிறாள்.
நனஞ்ச புழுதியிலே
நட்டுவச்ச தென்னம் பிள்ளே
நல்லாப் பாடருமிண்ணு
நாலு லச்சம் காய்க்குமிண்ணு
நட்டினீங்க தென்னம் பிள்ளை
நல்லாப் படராமே
நாலு லச்சம் காய்க்காமே
நடுச்சாவி ஆனதுவே
!
உழுத புழுதியிலே
ஊனி வச்ச தென்னம் பிள்ளை
ஓடிப் படருமின்னீர்
ஒரு லச்சம் காய்க்கு மின்னீர்
ஓடிப் படராமே
ஒரு லச்சம் காய்க்காமே
சிந்திக் கவுந்ததுவே
சொல்லு பிழை ஆனதுவே
!
வட்டார வழக்கு
:
இன்னீர்-என்றீர்.
உதவியவர்
:
நல்லம்மாள்
சேகரித்தவர்
:
கு. சின்னப்ப பாரதி |
இடம்
:
பொன்னேரிப்பட்டி,
சேலம் மாவட்டம். |
|