சித்தியின்
கொடுமை
அவளுடைய அம்மா தன்
பெண்ணை அனாதைபோல் விட்டு விட்டு இறந்து விட்டாள். தந்தை இருக்கிறார். தந்தை தாய்க்கு
ஈடாக முடியுமா? தாயில்லாப்பிள்ளை, பேச வாயில்லாப்பிள்ளை என்று சும்மாவா
சொல்கிறார்கள். அநேகமாக சித்தி (அதாவது மாற்றாந்தாய்) கொடுமைக்காரியாக இருப்பதைப்
போலவே அவளுக்கு வாய்த்த மாற்றாந்தாயும் அவளைக் கொடுமைப்படுத்துகிறாள். தானே வீட்டிற்கு
அதிகாரியாக இருக்க வேண்டுமென எண்ணுகிறாள். அதனால் அவளைத் திருமணம் செய்து கொடுக்க
எண்ணுகிறாள். உண்மையான அன்பு செலுத்தும் பெற்ற தாயாக இருந்தால் மகளை-மணம் செய்து
கொடுக்கும் இடத்தைப்பற்றி நல்ல எண்ணம் கொண்டு மாப்பிள்ளையாகப் போகிறவனின் குண
விசேஷங்களை அறிந்த பின்பே திருமணத்தை நடத்துவாள். ஆனால் அவளுடைய சித்தியோ நல்லெண்ணமில்லாதவளாதலால்
அவளை ஒரு நற்குணமில்லாதவனும், நல்ல பழக்கங்கள் இல்லாதவனுமாகிய ஒருவனுக்கு மணம் செய்து வைத்து
விடுகிறாள். மணமான பின்பு அவள் படும் துன்பங்களையும், இந்தத் திருமணத்திற்குக் காரணமாயிருந்த
சித்தியின் கொடுமையையும் இப்பாடல் குறிப்பிடுகிறது.
வெங்காயம் வெங்காயம்
வதக்கி வச்ச வெங்காயம்
செங்கோட்டை அத்தான் மாரு
பெண் கேட்டு வந்தாக
எங்க ஐயா இளராசா
இல்லைண்ணு சொன்னாக
எங்கம்மா சண்டாளி
இருக்குன்னுஞ் சொன்னாளே
சேகரித்தவர்
:
S.S.
போத்தையா |
இடம்
:
சிவகிரி,
நெல்லை மாவட்டம். |
|