ஆண் : இத்தனையும் தங்கையரே
கொண்டு வந்தா
என்ன பலன் தங்கையரே
காணப் போர
 

பெண் : பருப்பு நல்லா அண்ணாடத்தான்
பத்துப் பொதி
பாங்குடனே அண்ணாடா நான்
கொண்டு வந்தேன்
 

ஆண் : இத்தனையும் தங்கையரே
கொண்டு வந்தா
என்ன பலன் தங்கையரே
காணப் போர
 

பெண் : கத்திரிக்கா அண்ணாடா
கால்தூக்கு
கணக்குடனே அண்ணாடா
கொண்டு வந்தேன்
உப்பு நல்லா அண்ணாடா
ஒரு பொதி
உணவுடனே அண்ணாடா
கொண்டு வந்தேன்
பட்டுப் பாயி அண்ணாடா
எடுத்துக்கிட்டு
பரியங்களும் அண்ணாடா
கட்ட வந்தேன்
முத்துப் பாயி அண்ணாடா
தூக்கிக்கிட்டு
முகூர்த்தங்களும் அண்ணாடா
பார்க்க வந்தேன்.
 

ஆண் : இத்தனையும் தங்கையரே
கொண்டு வந்தா
என்ன பலன் தங்கையே நீ
காணப் போர
 

பெண் : ஆலமரம் அண்ணாடா நான்
சாட்சி வச்சி
அளுது கொண்டு
அண்ணாடா போரேனடா