ஊர்களில் போட்டி
சூரங்குடியும், தங்கம்மாள்புரமும் அருகருகே உள்ள ஊர்கள். தங்கம்மாள்புரத்தார்
தன் ஊர் பெருமையை சூரங்குடியாரிடம் சொல்லுகிறார்கள். அவர்கள் உடனே வேடிக்கையாக தங்கம்மாள்புரத்தை
தாழ்த்தி தம் ஊரை உயர்த்திப் பாடுகின்றனர்.
தங்கம்மாள்புரத்தார்--
ஊறி
ஊறித் தண்ணி யெடுக்கும்
ஊத்தப் பய
சூரங்குடி
பாடிப்
பாடித் தண்ணி யெடுக்கும்
பாண்டிய ராசா
தங்கம்மாள்புரம்.
சூரன்குடியார்--
தட்டாம்
பயிறவிக்கும்
தட்டுக் கெட்ட தங்கம்மாள்புரம்
மொச்சைப் பயிறவிக்கும்
முதலாளி சூரங்குடி.
குறிப்பு: மொச்சைப் பயிர்,
இழவுக்கு அவிப்பார்கள்.
சேகரித்தவர்
:
S.S.போத்தையா |
இடம்
:
நெல்லை மாவட்டம். |
கீழ் வரும் பாடல்கள் பாதியாகப்பட்டன. அவற்றின் முடிவு அனுமானித்து
எழுதப்பட்டது.
முட்டியிலே
சோறு பொங்கி
மூடி வைக்கும்
சூரங்குடி
தவலையிலே சோறு பொங்கி
தானமிடும்
தங்கம்மாள்புரம்
குத்துக்
கல்லு மேலிருந்து
குசும்பிழுக்கும்
சூரங்குடி
வைரக்
கல்லு மேலிருந்து
வழக்கு
தீர்க்கும் தங்கம்மாள்புரம்
|