சிவகாசிக் கலகம்-1
அண்ணன் தம்பி நாலு பேராம்
அழகான
ராமச்சந்திரன்
ஆனைகுத்தும்
வெள்ளைத் தேவர்
அடிச்சாராம்
பட்டாளத்த
பூனைகுத்து
பொன்னுச்சாமி
புலியக்
குத்தும் ராமச்சந்திரன்
கலங்கிடா படை
திரட்டிக்
கொல்லுதாரே
சிவகாசிய
கட்டக்
கட்ட வெடியெடுத்து
கரு மருந்து
உள்ளடச்சு
சுட்டாரே
சிவகாசிய
செந்தூளாய்ப் போகும்படி
நல்ல மறத்தி பெற்ற
நடுவப்
பட்டி வெள்ளையத் தேவர்
சுட்டாராம்
சிவகாசிய
செந்தூளாய்ப் போகும்படி
கருந்தூளா
ஆக்குச் சய்ய
வெள்ளையத் தேவர் பட்டாக்கத்தி
ஆறுமுகம் உள்ள புத்தி
சாலாட்சி
அம்மன் வெற்றி
வட்டார வழக்கு:
குத்தும்-கொல்லும்;
கட்ட-கட்டை; சிவகாசிய-சிவகாசியை;
ஆக்குச் சய்ய-ஆக்கி விட்டது ஐயா; சாலாட்சி-விசாலாட்சி.
குறிப்பு:
ஆறுமுகம் என்பவர் இப்பாடலை எழுதியவராகலாம்.
|