சிவகாசிக்
கலகம்-2
வெள்ளையத் தேவன் விசாலாட்சி கோயிலை அடைக்கச் சொல்லி, கோயிலினுள் நுழைய முயன்ற
இரு நாடார்களைக் கொன்றான். ஆனால் நாடார்களுக்கு ஆதரவாகப் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து
வந்த இரு சக்கிலியர்கள் தந்திரமாக வெள்ளையனையே கொன்று விட்டார்கள். இப்பாடல்
கலகத்தின் கொடுமையைக் கூறுகிறது.
நாலு பேரு அண்ணன் தம்பி
நடுவப்பட்டி வெள்ளை ஐயா
பொட்டி ஒடைக்கு முன்னே
போட்டாரே ஏழு பேரை
வீர மறத்தி பெற்ற
வீரமுள்ள வெள்ளை ஐயா
சாலாச்சி சந்நிதியைத்
தானடைக்கச் சொன்னாரையா
மொட்டையநாடார் மகன்
முதக் குட்டி செம்புக் குட்டி
வெள்ளையத் தேவரிடம்
வெட்டுப் பட்டு சாகுறானே!
பாஞ்சாலம் குறிச்சியில
பகட மக்க ரெண்டு பேரு
அந்தரம் அடிச்சல்லவோ
தந்திரமா வெட்டினானே!
குறிப்பு:
நாடார், எதிர்க்கட்சி
இரண்டையும் சேராதவர்கள் எழுதியபாடல்.
சேகரித்தவர்:
S.M.
கார்க்கி |
இடம்:
சிவகிரி,
நெல்லை மாவட்டம். |
|