மாயாண்டி துரோகம்
சந்தனமும் மருதமுத்தும்
சமுச்சாரம் பேசையிலே
நத்தக்கண்ணு மாயாண்டி
நாக்குத் தள்ளப் போட்டாண்டி
நீதிபதி தவிப்பு
பேரான சந்தனத்தை
பெரிய குளம் தள்ளி விட்டு
முடிவு சொல்ல மாட்டாமே
முளிக்கிறானே மாஸ்திரேட்டு
மூக்கம்மாள் தவிப்பு
சந்தனம் பெண்டாட்டி
சபை நிறைஞ்ச மூக்கம்மாளாம்
சந்தனத்தைத் தூக்கும்போது-உன்
சதுரம் கொஞ்சம் வாடுதடி
தாயிக்கு போலீசார்
கூறுவது
அடிக்காலத்தா
அநியாயம் செய்யாலாத்தா
தலைக்காலை எடுத்துக்கிட்டு
நிறுத்துக்கடி உன்மகனை
வட்டார வழக்கு:
சமுச்சாரம்-சமாச்சாரம்
;
நாக்குத்தள்ள-தூக்கிலேற்றப்
பிடித்துக் கொடுத்தான்
;
சதுரம்-சரீரம்.
குறிப்பு:
கடைசி
இரண்டடி-தலையும் காலும் இல்லாமல் உன் மகனை எடுத்துக்கொள் என்னும் கருத்துப்பட அமைந்துள்ளது.
சேகரித்தவர்
:
S.M.கார்க்கி |
இடம்
:
சிவகிரி. |
|