சிவகிரி ஜமீன்தார்-2
பிறந்தது சிவகிரி
வளர்ந்தது ஆத்துப்பட்டி
மாண்டது குத்தாலம்
மகாராஜா நம்ம துரை
மதுரையிலே குதிரை வாங்கி
மல்லியப்பூ சேடங் கட்டி
அடிக்காக நம்ம துரை
ஆத்து மணல் தூள் பறக்க
வடக்க இருந்தல்லவோ
வாராக சின்னசாமி
பதினெட்டு பட்டி ஜனம்
பாக்க வந்து காத்திருக்கு
பட்டணங்கள் போகலாமா
பந்தயங்கள் கூறலாமா
இந்தக் கலியுகத்தில்
இஷ்டர்களை நம்பலாமா
சிவகிரி மகாராசா
செல்வத் துரை பாண்டியன்
நீசநிதியாலே மோசம் வரலாச்சே
மானழுக, மயிலழுக
மாடப்புறா கூட அழுக
சிவகிரி ஜனங்களெல்லாம்
தெருத் தெருவா நின்னழுக
கல்யாண மால்
கட்டச் சொல்லி உத்தரவு
ஒரு நாள் ஒரு பொழுது
மகாராசா உக்காந்து பாக்கலியே
காத்திய மடத்தோரம்
கைலாசகுழி வெட்டிருக்கு
வெட்டி நாளாகுது
வெரசா வரும் மோட்டார்காரே.
வட்டார வழக்கு:
காத்திய மடம்-கார்த்திகை நாள் விழா நடைபெறும் மடம்
;
மொந்தல்-மூலை
;
அழுக-அழ
சேகரித்தவர்
:
S.M.கார்க்கி |
இடம்
:
சிவகாசி,
இராமநாதபுரம் மாவட்டம். |
|