பட்டணத்தைப் பார்த்த
பட்டிக்காட்டான்
வெள்ளைக்காரன் ஆளும் காலத்தில் பட்டிக்காட்டான் பட்டணம்
பார்க்க மனைவியோடு போனான். அங்கே அவன் கண்டவற்றை தான் முன் அறிந்திருந்த
பொருள்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறான். விமானம், தந்தி, மின்விளக்கு இவையாவும் அவனுக்கு அதிசயத்தை உண்டாக்குகின்றன.
மானத்திலே போகுது பார்
மாடில்லாத வண்டி-அது
மஞ்சிட்டு போல் பேசுது பார்
வெள்ளெக்காரன் கம்பி
கச்சேரி மேலெரியும்
காந்தி சோதி வௌக்கு-அது
எந்நீதமாய் எரியுது பார்
வெள்ளெக்காரன் விளக்கு
பட்டணத்தை பாக்க பாக்க
பசியெடுக்கவுமில்லெ-நம்ம
பட்டிக்காட்டை சுத்திச் சுத்தி
பாக்க மனசு வல்லே
சேகரித்தவர்
:
கவிஞர்
சடையப்பன் |
இடம்
:
அரூர்,தருமபுரி
மாவட்டம். |
|