|
வண்டிக்காரன்
காதலி
வண்டிக்காரன் பாரமேற்றிக் கொண்டு அயலூர் போகிறான். பாரம் விலையானால் அவளுக்கு அணிகள்
வாங்கி வருவதாகச் சொல்லுகிறான்.
அவள் அழைத்துச் செல்லாமல் பசப்பு வார்த்தை சொல்ல வேண்டாம் என்று சொல்லுகிறாள்.
மேலும் அயலூரிலே தன்னை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதை வேறுபட்ட இரு உவமைகள் மூலம்
வற்புறுத்துகிறாள். அவனை ஐந்தாறு பசுக்கள் நடுவிலுள்ள காளையாகவும் உவமிக்கிறாள். போதாதோ?
அவன் இச்சூட்டையே நினைத்துக் கொண்டு திரும்பி வந்துவிட மாட்டானோ?
வண்டி செல்லும் ஊர்களின் பெயர்களும் பாரம் எதுவென்பதும், பாடும் பகுதிகளைக் குறித்து மாறுபடும்.
|
வண்டிக்காரன்
:
|
கடல புடிச்ச வண்டி
கம்பத்துக்குப் போறவண்டி
கடலை விலையானா-உனக்கு
கடகம் பண்ணி நான் வருவேன்
உப்பு முடிஞ்ச வண்டி
கொப்பாளம் போற வண்டி
உப்பு விலையானா-உனக்கு
கொப்பு பண்ணி நான் வருவேன்
|
| காதலி
:
|
வண்டியலங்காரம்
வண்டிமாடு சிங்காரம்
வண்டிக்காரன் கூடப்போனா
மெத்த மெத்த அலங்காரம்
அஞ்சாறு பசுக்களோடே
அழக செவலைக் காளையோடே
போகுதில்லே என் எருது
பொல்லாத சீமைதேடி
கட்டக் கருத்தோடு
மெத்தக் கிழட்டாடு
மேங்காட்டை நோக்குதில்லை |
|
சேகரித்தவர்:
S.M.கார்க்கி |
இடம்:
சிவகிரி,
நெல்லை மாவட்டம். |
|