|
ஏழையாம் என் தாய்
அவளுக்கு ஆயிரக்கணக்கான சுற்றத்தார் உண்டு. ஆனால் தாய் இறந்து
விட்டாள். தாய் ஏழைதான். சுற்றத்தாரில் பணக்காரர்கள் பலர் உண்டு. ஆனால் வேதனைப்படும்
காலத்தில் தாயின் அன்பைப் போல சுற்றத்தாரின் பெருமையும், பொருளும் அவளைத் தேற்றுமா?
எட்டு மலைக் கந்தாண்ட
இரும்பிக் கம்பி ஆச்சாரம்
எண்ணை நிழலோடும்
எடுக்கும் பட்சி சீட்டாடும்
எட்டு லட்சம் என் சனங்க
எனக் குதவி நின்னாலும்
ஏழையாம் என் தாயி
எதிரில் வந்தார் சந்தோஷம்.
பத்து மலைக் கந்தாண்ட
பவளக்கம்பி ஆச்சாரம்
பாலும் நிழலோடும்
பறக்கும் பட்சி சீட்டாடும்
பத்து லட்ச என் சனங்க
பக்கமாய் நின்னாலும்
பால் கொடுத்த என் தாயி
பக்கம் வந்தால் சந்தோஷம்.
வட்டார வழக்கு
:
ஆச்சாரம்-மாளிகை.
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அரூர்,சேலம்
மாவட்டம். |
|