|
மஞ்சனில்லாப்
பாவி
பல ஒப்பாரிகளில் மைந்தனில்லாக் குறைக்காகப் பெண்கள் வருந்தி
அழுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் அதற்கு வினையையும் தெய்வத்தையும் காரணம் காட்டுவார்கள்.
இங்கே இப்பெண் கண்காணாத சக்திகளின் மீது பழி போடாமல், உண்மையான சமூக விஞ்ஞானக்
காரணத்தைக் கூறுகிறாள்.
மல்லிகைப் பூ மெத்தையிலே
மாதங்கூடத் தூங்கலையே
மாமியாள் கொடுமையினால்
மஞ்சனில்லாப் பாவியானேன்.
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அரூர், தருமபுரி
மாவட்டம். |
|