|
மணை போட
யாருமில்லை
ஆண்டுதோறும் மகளையும், மருமகனையும் அழைத்து மணைபோட்டு வரிசை
கொடுத்து தந்தை வீட்டில் உபசாரம் செய்வது வழக்கம். தந்தை இறந்துவிட்டார். அடுத்த
ஆண்டில் மாரியம்மன் திருவிழா வரும். ஆனால் அவளை அழைத்து அன்போடு பாராட்ட யார்
இருப்பார்கள்?
வாரம் ஒரு நாளு
வள்ளியம்மை திருநாளு
வள்ளியம்மை திருநாளில்
வரிசையிட ஒருவரில்லை
மாசம் ஒரு நாளு
மாரியம்மன் திருநாளு
மாரியம்மன் திருநாளில்
மாலையிட யாருமில்லை
மணைப்போட ஒருவரில்லை
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அரூர், தருமபுரி
மாவட்டம். |
|