முடைய வாழ்க்கையில் எந்தப் பெரியார்களோடு பழக நேர்ந்ததோ
அவர்களைப் பற்றிய வரலாறுகளையும் நிகழ்ச்சிகளையும் சுவை ததும்ப
எழுதினார்கள். தியாகராச செட்டியார் சரித்திரம் கோபாலகிருஷ்ண பாரதியார்
சரித்திரம், மகா வைத்தியநாதையர் சரித்திரம், கனம் கிருஷ்ணையர் வரலாறு
என்பன இவர்களுடைய அன்பையும் எழுதும் ஆற்றலையும் நன்றியறிவையும்
விளக்குகின்றன. சிலருடைய வரலாற்றைச் சுருக்கமாக எழுதினார்கள்; இந்த
வகையில் பூண்டி அரங்கநாத முதலியார், மணி ஐயர், வி.கிருஷ்ணசாமி ஐயர்,
திவான் சேஷையா சாஸ்திரிகள் முதலியவர்களைப் பற்றிய கட்டுரைகள்
வெளியாயின.
இவர்களுடைய பெருமையைத் தமிழுலகம், மெல்ல மெல்ல
உணரலாயிற்று. அரசாங்கத்தார், 1906-ஆம் ஆண்டு
‘மகாமகோபாத்தியாயர்’
என்ற பட்டத்தை அளித்தார்கள். 1917-ஆம் ஆண்டு பாரத தர்ம
மண்டலத்தார்,
‘திராவிட வித்தியா பூஷணம்‘ என்ற பட்டத்தை வழங்கிச்
சிறப்பித்தார்கள். 1925-ஆம் ஆண்டு காமகோடி பீடாதிபதிகளாகிய ஸ்ரீ
சங்கராசார்ய ஸ்வாமிகளவர்கள்,
‘தாக்ஷிணாத்திய கலா நிதி’ என்ற
பட்டத்தை
அருளினார்கள். இவர்கள், சென்னை, மைசூர், ஆந்திரா, காசி
முதலிய
இடங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் பல வகையில் கலந்து
தொண்டாற்றினார்கள். 1932-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தார் ‘டாக்டர்’
பட்டம் அளித்தார்கள்.
1935-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6-ஆம் தேதி ஐயரவர்கள் 80-
ஆண்டுகள் நிறைந்து விளங்கினார்கள். அவர்களுடைய சதாபிஷேக
விழாவைத் தமிழுலகம் முழுவதும் கொண்டாடியது. சென்னையில் பல்கலைக்
கழக மண்டபத்தில் இவ்விழா மிகமிகச் சிறப்பாக நடைபெற்றது.
பழுத்த பருவத்திலும் ஐயரவர்கள் தமிழ்த் தொண்டு வீறு கொண்டு
நடைபெற்றது.
குறுந்தொகையை விரிவான உரையுடன் பதிப்பித்தார்கள்.
சிவக்கொழுந்து தேசிகர், குமரகுருபரர் என்னும் புலவர்களின் பிரபந்தத்
திரட்டுகள் குறிப்புடன் வெளியாயின. தமிழன்பர்களின் விருப்பப்படி ஆனந்த
விகடனில் வாரந்தோறும் தம்முடைய வரலாற்றை “என் சரித்திரம்” என்ற
தலைப்பில் எழுதத் தொடங்கினார்கள். 1940-ஆம் ஆண்டு ஜனவரியில்
தொடங்கிய அது 122 அத்தியாயங்களோடு சுயசரித்திரமாக வரும் நிலை
பெற்றது.
1942-ஆம் ஆண்டு உலகப் பெரும்போர் நிகழ்ந்தபோது ஐயரவர்கள்
தம் குடும்பத்துடன் திருக்கழுக்குன்றம் சென்று
|