கலை, பண்பாட்டுக் கல்லூரி) ஆவார். கொங்குநாடுபற்றிய சில 
முக்கியக் குறிப்புகளையும் இவர் அளித்துள்ளார்.

பழனி நகரிலும், பழனி நகரையடுத்தும் உள்ள கோவில்களைப்பற்றி
ஆய்வு செய்துள்ள பேராசிரியர் திரு. நரசிம்மன் (இந்தியப் 
பண்பாட்டுத்துறை, அருள்மிகு பழனியாண்டவர் கலை, பண்பாட்டுக் 
கல்லூரி) பழனி தல வரலாறுபற்றிய சில தகவல்களை அறிய 
உதவியுள்ளார்.

இந்நூலிற்கான கைப்பிரதிகளைப் பார்வையிட்டு, அவைகளைப்
பிழையின்றித் திருத்தம் செய்ய உதவியவர் டாக்டர் திரு. மு. மாணிக்கம்,
(தமிழ்ப்பேராசிரியர், அருள்மிகு பழனியாண்டவர் கலை, பண்பாட்டுக் 
கல்லூரி) ஆவார். அருள்மிகு பழனியாண்டவர் கலை, பண்பாட்டுக் 
கல்லூரியின் வரலாற்றுத் துறையைச் சார்ந்த பேராசிரியர் 
திரு. C . சுப்பராயலு, உதவிப் பேராசிரியர்கள் திரு. D . கங்காதரன், 
திரு T . செல்லப்பன் ஆகியோரும், இந்நூல் உருவாவதற்குப் 
பலவாறு உதவி புரிந்துள்ளனர்.

இந்நூலிற்கான சில துணை நூல்களை அளித்து உதவியவர் 
திரு. K. மகாலிங்கம் M.A . (தமிழ்நாடு அரசு செய்தி நிலையம், மதுரை)
ஆவார்.

ஆர்க்காடுபற்றியும், சென்னை திருவல்லிக்கேணி பள்ளிவாசல், 
திருச்சி முகமது பள்ளிவாசல்பற்றியும் அறிய முக்கியத் தகவல்களைப் 
பெற உதவியவர்கள், ஆர்க்காட்டு இளவரசர் அறக்கொடை நிதிப் 
பரிபாலன சபையினர் (சென்னை, திருச்சி) ஆவர். கிறித்தவ
ஆலயங்களைப்பற்றிய தகவல்களை அறியப் பல தலங்களின் 
கிறித்தவக் குருக்கள் இந்நூலாசிரியருக்குப் பெரிதும் உதவியாக 
இருந்தனர்.

இந்நூலைப் பதிப்பிக்க ஏற்பாடு செய்து உதவியவர் 
திரு S . சுந்தரமூர்த்தி, B.A., B.L . (மதுரை - இராமநாதபுர 
வர்த்தக சபை, மதுரை) ஆவார்.

இந்நூல் உருவாவதற்குப் பெரிதும் உதவிய மேற்கூறிய
பேராசிரியர்களுக்கும், பல பெருமக்களுக்கும், சமயச் சான்றோர்