முனைவர் மு. தம்பிதுரை
கல்வி அமைச்சர்  

தலைமைச் செயலகம்
சென்னை - 600 009

அணிந்துரை

அமரர் கே.கே.பிள்ளை சிறந்த வரலாற்று ஆசிரியராக விளங்கியவர்.
நெஞ்சுறுதியும் நேர்மைத்திறனும் மிக்கவர். பேராசிரியர் கே.கே.பிள்ளை
அவர்கள் எழுதிய Social History of Tamils, Natrinai in its Historical
Setting, South India and Ceylon, Studies in2 the History of India
with Special Reference to Tamil Nadu
போன்றன அன்னாரது
அறிவுத்திறத்திற்குச் சான்று பகர்வனவாகும். அவ்வகையில் அவர் எழுதிய
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்’ என்ற சிறப்புமிக்க நூலினைத்
தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவியுடன் 2000-ஆம் ஆண்டில் 2000 படிகளாக
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக வெளியிட்டது. இந்நூற்படிகள்
அனைத்தும் முற்றிலுமாக விற்றுத் தீர்ந்த நிலையில் மீளவும் இதனை
மீள்பதிப்பாக இந்நிறுவனம் இப்போது வெளியிடுவதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.

பேராசிரியர் கே.கே. பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கியங்கள்,
இலக்கணங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், அகழாய்வுகள், வெளிநாட்டார்
குறிப்புகள், நாணயங்கள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூலை
எழுதியுள்ளமை போற்றத்தக்கதாகும்.

தமிழக வரலாறு அடிப்படை ஆதாரங்கள்” என்பதில் தொடங்கி
இருபதாம் நூற்றாண்டுத் தமிழகம்” வரை 20 தலைப்புகளில் இந்நூலை
யாத்துள்ளார். இந்நூலில் நிழற்பட விளக்க அட்டவணைகளும், நாட்டு
வரைபட விளக்க அட்டவணைகளும் இடம்பெற்றுள்ளமை இவரது ஆய்வுத்
திறனைப் பறைசாற்றுவனவாகும்.