சான்றாக ’20-ஆம்
நூற்றாண்டில் தமிழகம்’ என்ற நிலையில் அதனை
20-ஆம் தலைப்பாகவே அமைத்துள்ளமையைக் காணலாம். இவ்வொழுங்கு
முறை நூலின் கட்டுக்கோப்பிற்கும் செய்தி வெளிப்பாட்டிற்கும் இடையே ஒரு
தொடர்பு இருப்பதைக் காட்டுகின்றது. கே.கே. பிள்ளை அவர்கள் வரலாற்று
ஆசிரியர் என்ற நிலையில், இந்நூலில் பல்வேறு சான்றாதாரங்களைப்
பயன்படுத்தி இருந்தாலும், இலக்கியச் சான்றுகளைப் பேரளவு
பயன்படுத்தியிருப்பது இந்நூலுக்குப் பெருமை சேர்க்கிறது.
கே.கே.
பிள்ளை அவர்கள் இந்நூலை 5 பகுதிகளாக அமைத்துச்
செய்திகளைக் கூறியுள்ளார்.
1)
பண்டைய தமிழரின் வாழ்க்கை
2)
4-9வரை சமூக நிலை
3)
10-13 வரை சமூக நிலை
4)
19-ஆம் நூற்றாண்டு வரை சமூகநிலை
இந்த
ஐந்து பிரிவுகளில் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தும்
நிலையில், அந்தந்தக் கால எல்லைக்குரிய வரலாற்றை முதலில் கூறி,
அதற்கு அடுத்த நிலையில் சமூகத்தை ஆய்ந்து இருக்கிறார் என்பது நூலின்
பொருளடக்கத்தை ஆய்ந்து பார்த்தால் நன்கு விளங்கும். குறிப்பாகச் சோழப்
பேரரசின் தோற்றம், சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் என்ற
தலைப்புகளில் சோழர் வரலாற்றைக் கூறி, அக்காலத்தின் சமுதாய வளர்ச்சி
எப்படி இருந்தது என்பதைச் சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம்
(10 - 13 வரை) என்ற தலைப்பில் ஆய்ந்து இருப்பதைச் சான்றாகக் கூறலாம்.
இவ்வாறு
பிரித்துக்கொண்டு தமிழ்ச் சமுதாயத்தை ஆய்வு செய்வதற்கு
முன் அந்தந்தக் கால அரசியல் வரலாற்றைக் கூறி அதனைத் தொடர்ந்து
அந்தக் காலச் சமுதாயத்தை
|