குலத்தார்
வாழ்ந்தனர் என்றும் அவர்கள் ஆடிய கலை பரதம்
என்றும் ஆரிய வேதியருக்கு இக்கலையில் உடன்பாடு கிடையாது
என்றும் பரத நாட்டியம் ஆடுபவர்களை அவர்கள் மிகவும்
தாழ்வாகக் கருதினர் என்றும் சுட்டியுள்ளார் (ப.94). மேலும்
பரத
நாட்டியத்தில் கூறப்படுகின்ற அடவுகள் தமிழகக் கோயில்களில்
காணப்படுகின்றன. எனவே பரத நாட்டியம் முதலில் தமிழில்
எழுதப்பட்டு, பின்னர் வடமொழி வாணர்களால் மொழியாக்கம்
பெற்று இருக்கலாம் என்று கருத இடமுள்ளது.
இவ்வாறு,
அரிய செய்திகளால் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும்
இந்நூலினைத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1972இல் முதல் பதிப்பாக
வெளியிட்டது. பின்னர் இந்நூல் 1975,78,81 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்புச்
செய்யப்பட்டது. 1981க்குப் பின்னர் இந்நூல் மீண்டும் பதிக்கப்பெறவில்லை.
எனவே இந்நூல் வெளிவரவேண்டிய இன்றியமையாமையையும் தேவையையும்
கருதி இந்நிறுவனம் இந்நூலினை வெளியிடுகிறது.
இந்நூலுக்கு
அணிந்துரை வழங்கிய நிறுவனத் தலைவர் மாண்புமிகு
தமிழ் ஆட்சிமொழி பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை
அமைச்சர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களுக்கும் எங்கள் நன்றி.
தமிழ்
வளர்ச்சித்துறை இந்நூலினை மறுபதிப்புச் செய்ய நிதி
வழங்கியுள்ளது. நல்கை வழங்கிய தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்
முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்கு நன்றி.
இந்நிறுவன
வளர்ச்சியில் ஆக்கமும் ஊக்கமும் காட்டி வருகின்ற
நிறுவனத் தலைவர் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி-பண்பாடு மற்றும்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் முனைவர் மு. தமிழ்க்குடிமகன்
அவர்களுக்கும் தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் அறநிலையத் துறைச்
செயலாளர் திருமிகு. சு. இராமகிருட்டிணன் இ.ஆ.ப. அவர்களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றி.
ச.சு. இராமர் இளங்கோ
|