இந்நூல் இயற்றிய திருவாளர் ந. சி. கந்தையா அவர்களைத் தமிழ்நாடு நன்கு அறியும். அவர்கள் முன்னர் எழுதி வெளியிட்டிருக்கின்ற 'தமிழகம்,' 'தமிழர் சரித்திரம்,' 'சரித்திர காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர்' முதலிய நூல்களைப் படித்துணர்ந்த அன்பர்கட்கு இந்நூல் ஒரு நல் விருந்தாகும்.

தமிழ் நாட்டுக்குப் பெரிய விழிப்பை யுண்டுபண்ணக் கூடிய இந்த நூலை ஒவ்வொருவரும் வாங்கிப் போற்றின், மேலும் இவ்வரலாற்றுத் தொண்டைத் தொடர்ந்து செய்ய இந்நூலாசிரியர்க்கு ஊக்கம் அளிப்பதாகும்.


சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.