முகப்பு | தொடக்கம் |
காலத்தில் கிடைத்துள்ள சங்க காலக் காசுகள் இதனை உறுதிப் படுத்துகின்றன. வணிகத்தை மேற்கொண்டவர்கள் எவ்வகையான போக்கு வரத்தைக் கைக்கொண்டிருந்தனர் என்பதும் முக்கியமாகும். கோவேறு கழுதைகள், குதிரைகள், மாட்டுவண்டிகள், கழுதைகள் ஆகிய பிற புழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது. தரை வாணிகம் புழக்கத்தில் இருந்த காலத்தில், கடல் வாணிகமும் நடைமுறையில் இருந்தது. ஆழ்கடல் பயணம் இருந்ததா? அல்லது கடலோரத்தில் மட்டுமே பயணம் செய்தனரா? என்ற விவாதம் எழுப்பப்பட்டது. பசிபிக் கடலில் உள்ள பல்வேறு தீவுகளுக்கும் வணிகம் நிமித்தம் பயணம் செய்திருப்பதை மயிலை சீனி. உறுதிப்படுத்துகிறார். இதன் மூலம் ஆழ்கடல் பகுதி களுக்கும் சென்றிருப்பதை அறியமுடிகிறது. அரபு நாட்டினர், யவணர், சாவக நாட்டினர், ஆகிய பிறர் தமிழ்நாட்டிற்கு வணிகத்திற்காக வருகைபுரிந்தனர். இதற்காக பல்வேறு துறைமுகங்களும் உருவாக்கப்பட்டன. குமரித் துறைமுகம், கொல்லந்துறை துறைமுகம், எயிற்பட்டின துறைமுகம், அரிக்கமேடு துறைமுகம், காவிரிபூம்பட்டின துறைமுகம், தொண்டித் துறைமுகம், மருங்கூர்ப் பட்டின துறைமுகம், தொண்டி, முசிறி துறைமுகங்கள், இலங்கையில் பல இடங்களில் இருந்த துறைமுகங்கள் எனப் பல்வேறு இடங்களில் துறைமுகங்கள் இருந்ததைஅறிய முடிகிறது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் வணிகம் தொடர்பான செய்திகள், வளர்ச்சி பெற்ற நாகரிகம் மிக்க சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. சங்க காலத்தில் காவிரிபூம்பட்டினம், மதுரை ஆகிய பிறபெரும் நகரங்களாக விளங்கியமையைக் காண முடிகிறது. வஞ்சி, சேரநாட்டின் தலைநகரமாக விளங்கியதை மயிலை சீனி. ஆய்வு செய்துள்ளார். |
மேல் | அடுத்த பக்கம் |