தொல்காப்பியம்
சொல்லதிகாரம்
முதலாவது
கிளவியாக்கம்
1. உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை யென்மனா ரவரல பிறவே
ஆயிரு திணையி னிசைக்குமன் சொல்லே.
என்பது சூத்திரம்.
இவ் வதிகாரம் சொல்லிலக்கணம் உணர்த்தினமை காரணத்தாற் சொல்லதிகாரம்
என்னும் பெயர்த்து. சொல் என்பது எழுத்தொடு
புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் ஓசை. அதிகாரம் என்பது முறைமை.
மற்று, அச் சொல் எனைத்து வகையான் உணர்த்தினானோவெனின், எட்டு
வகைப்பட்ட இலக்கணத்தான் உணர்த்தினான்
என்க.
அவையாவன : இரண்டு திணை வகுத்து, அத் திணைக்கண் ஐந்து பால்
வகுத்து, எழுவகை வழு வகுத்து, எட்டு வேற்றுமை வகுத்து, அறுவகை
ஒட்டு வகுத்து, மூன்று இடம் வகுத்து, மூன்று காலம் வகுத்து, இரண்டு
இடத்தான் ஆராய்தல்.
இரண்டு திணையாவன * - உயர்திணையும், அஃறிணையும் :
ஐந்து பாலாவன - ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்பன ;
எழுவகை வழுவாவன - திணைவழு, பால்வழு, இடவழு, காலவழு, செப்புவழு, வினாவழு, மரபுவழு என்பன ;
எட்டு வேற்றுமையாவன - பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண்,
விளி என்பன ;
அறுவகை ஒட்டாவன - வேற்றுமைத்தொகை, உவமைத்தொகை, வினையின்றொகை,
பண்பின்றொகை, உம்மைத்தொகை,
அன்மொழித்தொகை என்பன ;
மூன்று இடமாவன - நன்மை, முன்னிலை, படர்க்கை என்பன ;
மூன்று காலமாவன - இறந்தகாலம்,
நிகழ்காலம், எதிர்காலம்
என்பன ;
இரண்டு இடமாவன - வழக்கிடம், செய்யுளிடம் என்பன.
இனி, இவ்
|