இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1151
Zoom In NormalZoom Out


    வியும்
தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென வறியுமந் தந்தமக் கிலவே
உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். 

இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், ஐயமறுத்தல் நுதலிற்று. 

உரை : பெண்மை  சுட்டிய  உயர்திணை  மருங்கின்  என்பதனை
மொழிமாற்றி, உயர்திணை மருங்கின் பெண்மை  சுட்டிய எனக் கொள்க.
தெய்வஞ் சுட்டிய பெயர் நிலைக்  கிளவியும் என்பது -- தெய்வத்தைச்
சுட்டிய  பெயர்ப் பொருளும்   என்றவாறு ;   இனிப்   பெயர்நிலைக்
கிளவியென்பதற்கு    ஒருவன்    சொல்லுவது:  பெயர்   என்பதனை
ஆகுபெயராற்   பொருளாக்கி,   பொருண்மேல்  நிலைபெற்ற  கிளவி
யென்னும்; இவ்வென அறியும் அந்தந் தமக்கிலவே என்பது -- தம்மை
வேறுபாலறிய நிற்கும் ஈற்றெழுத்தினை யில என்றவாறு ;  உயர்திணை
மருங்கிற்  பால்பிரிந்து  இசைக்கும் என்பது -- உயர்திணை மருங்கின்
முப்பாலினையும்  புலப்படுக்கும் எழுத்தினைத் தமக்கு ஈறாக இசைக்கும்
என்றவாறு. 

வரலாறு:  பேடி  வந்தான்,  பேடி  வந்தாள்,  பேடியர்   வந்தார்
எனவும்;  வாசுதேவன்  வந்தான்,   திருவனாள்  வந்தாள்,  முப்பத்து
மூவரும் வந்தார் எனவும் வரும். 

‘இவ்வென  அறியும்  அந்தந்  தமக்கிலவே’  என்னும் இலேசினால்,
நரகன் வந்தான், நரகி வந்தாள், நரகர் வந்தார் என்பன கொள்க. (4) 

5, னஃகா னொற்றே யாடூஉ வறிசொல். 

இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், ஆடூஉ அறிதற்கு  ஈற்றெழுத்து
கருவியாஞ் சொல் என்றவாறு. 

வரலாறு:    உண்டான்       என்னும்      இறந்தகாலத்தானும்,
உண்ணாநின்றான் என்னும்   நிகழ்காலத்தானும்,   உண்பான் என்னும்
எதிர்காலத்தானும்; கரியன், செய்யன் என்னும்  வினைக்குறிப்பினானும்,
இங்ஙன்  னகர  விறுதியாய   படர்க்கை  வினைமுற்றுச்   சொல்லால்
உயர்திணை