வருமாறு :
உண்டான் அவன், உண்டாள் அவள், உண்டார் அவர், உண்டது
அது, உண்டன அவை என இவை வினைநின்று பெயர்மேற்
றத்த மரபினான் வந்தன. இனிப் பெயரை முன் நிறீஇ வினையைப்
பின்னே கொணர்ந்து காட்டினும் அமையும்.
இனி, ‘மயங்கல் கூடா’ எனவே,
மயக்கமும் உண்டு என்பது
சொல்லப்பட்டதாம்.
அம் மயக்கம் எழுவகைப்படும். திணைமயக்கம்,
பான்மயக்கம், இடமயக்கம், காலமயக்கம், மரபுமயக்கம், செப்புமயக்கம், வினாமயக்கம்
என. மயக்கம் எனினும் வழு எனினும் ஒக்கும்.
அவை வருமாறு: அவன் வந்தன, அவன் வந்தது ; அவள் வந்தன, அவள்
வந்தது; அவர் வந்தன, அவர் வந்தது. இவை உயர்திணை அஃறிணைமேற் சென்று வழீஇயின.
இனி, அஃறிணை உயர்திணைமேற் சென்று வழீஇயின வருமாறு:
அது வந்தான், அது வந்தாள், அது வந்தார் எனவும், அவை வந்தான்,
அவை வந்தாள், அவை வந்தார் எனவும் வரும். இவை பன்னிரண்டுந்
திணைவழூஉ.
இனி, பால்வழூஉ வருமாறு: அவன் வந்தாள், அவன் வந்தார்,
அவள் வந்தாள், அவள் வந்தார் என இவை உயர்திணைப் பால்
வழூஉ. அது வந்தன, அவை வந்தது என இவை அஃறிணைப்பால்
வழூஉ. இவை யெல்லாம் பெயர் நின்று வினைமேல் வழீஇய.
இவ்வாறு
வினைநின்று பெயர்மேல் வழீஇயன வினை முன் நிறீஇப் பெயர்
பிறந்து கூட்டி யுரைத்துக்கொள்க.
இச் சூத்திரம் பொருண்மேன் மயங்கற்க என்றானாதலான், அவற்றுக்கட் கிடந்த
|