றவாறு; ஏகாரம் பிரிநிலை யேகாரம். வழீஇயினும்
என்ற உம்மை சிறப்பும்மை. எனவே, வினா வழீஇயினவிடத்து அமையாது என்பது. அப்பொருள் புணர்ந்த கிளவியான என்பது -- அப்பொருட்கு இயைபு பட வரின் என்றவாறு.
அவ்வாறு வழீஇ யமையுஞ் செப்பாவன : உற்றது உரைத்தலும், உறுவது கூறலும், ஏவுதலும் என இவை.
அவற்றுள், உற்றது உரைத்தல் என்பது : ‘சாத்தா, உறையூர்க்குச் செல்லாயோ?’
எனின், ‘கான் முட் குத்திற்று ; தலை நோகின்றது’ என்பது. இனி உறுவது கூறல் என்பது : ‘சாத்தா, உறையூர்க்குச் செல்லாயோ?’ எனின், ‘கடமுடையார் வளைப்பர் ; பகைவர் எறிவர்’ என்பது. இனி, ஏவுதல் என்பது : ‘சாத்தா, உறையூர்க்குச் செல்வாயோ?’ எனின், ‘நீ செல்’ என்பது.
இவை மூன்றும் வழீஇ யமைவன:
வழூஉவேயெனினும் அப்பொருள்பட வந்தமையின் அமைக என்பது, மற்றுள்ளனவும் மேலேயடங்கின. (15)
16. செப்பினும் வினாவினுஞ் சினைமுதற்கிளவிக்
கப்பொரு ளாகு முறழ்துணைப் பொருளே.
இச்சூத்திரம்
என்னுதலிற்றோவெனின்,
செப்புவானொடு வினாவுவானிடைக் கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை: செப்பினும் வினாவினும்
என்பது -- செப்புமிடத்தும் வினாவுமிடத்தும் என்றவாறு ; சினைமுதற் கிளவிக்கு என்பது -- சினைக்கிளவிக்கும் முதற்கிளவிக்கும் என்றவாறு ; அப்பொருளாகும் உறழ்துணைப் பொருளே
என்பது -- முதலொடு முதலே பொரூஉக சினையொடு சினையே பொரூஉக என்றவாறு.
வரலாறு: ‘கொற்றவன் மயிர் நல்லவோ? சாத்தன் மயிர் நல்லவோ?’ என்று வினாவின விடத்து, ‘கொற்றன் மயிரிற் சாத்தன் மயிர் நல்ல ; சாத்தன் மயிரிற் கொற்றன் மயிர் நல்ல’ என்றிறுக்க. இது சினையொடு சினை பொரீஇயினவாறு.
இனி, ‘கொற்றன் நல்லனோ? சாத்தன் நல்லனோ?’ என்று கூறியவிட
|