டத்து, ‘கொற்றனிற் சாத்தன் நல்லன் ; சாத்தனிற் கொற்றன் நல்லன்’? என்றிறுக்க. இது முதலொடு முதல் பொரீஇயினவாறு.
‘அப்பொரு ளாகும்’ என்றா னாதலான், ‘அவ்வச் சினைக்கு அவ்வச் சினையே பொரூஉக’ என்பது இது முதற்கும் ஒக்கும்.
இனி, சினை முதற் கூறிய முறையன்றிக் கூற்றினான் முதலுஞ் சினையும் உறழ்ந்து வருவனவும் உள, குண மருங்குபற்றி.
வரலாறு: ‘இம்மகள் கண் நல்லவோ? இக்கயல் நல்லவோ?’ என்பன போல்வன.
இனி, அப்பொருளாகும் உறழ் பொருள் என அமையும், துணை யென்பது மிகையெனில், துணைக்கும் என்பது உவமித்தல் ; அவ் வுவமத்துக்கண்ணும் அவ்வினப் பொருளே யாக என்பது.
உவமம் நாலு வகைப்படும் : வினை, பயன், மெய், உரு என. ‘புலி பாய்ந்தாங்குப் பாய்ந்தான்’ என்பது வினையுவமம். ‘மழைபோலும் வண்கை’ என்பது பயனுவமம். ‘துடிபோலும் நடு’ என்பது மெய்யுவமம். ‘பொன்போலும் மேனி’ என்பது உருவுவமம்.
இன்னும், ‘துணை’ யென்றதனான் எண்ணுமிடத்தும் இனமொத்தனவே யெண்ணுக, முத்தும் மணியும் பொன்னும் என. (16)
17. தகுதியும் வழக்குந் தழீஇயின வொழுகும்
பகுதிக் கிளவி வரைநிலை யிலவே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இதுவும் வழீஇ யமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை: தகுதி பற்றியும் வழக்குப்பற்றியும் பொருந்தி
நடக்கும். இலக்கணத்திற் பக்கச் சொற் கடியப்படா என்றவாறு.
தகுதி யென்பது மூன்று வகைப்படும். மங்கல மரபினாற் கூறுதலும், இடக்க ரடக்கிக் கூறுதலும், குழுவின் வந்த குறிநிலை வழக்கும் என.
செத்தாரைத் துஞ்சினார் என்றலும், சுடுகாட்டை
நன்காடு என்றலும் மங்கல மரபினாற் கூறுதல்.
இடக்க ரடக்கிக் கூறுதல் வருமாறு: கண் கழீஇ
வருதும், கண் குறியரா
யிருந்
|