இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1160
Zoom In NormalZoom Out


தார், பொறை யுயிர்த்தார் எனவும் வரும். 

இனி,  குழுவின்   வந்த   குறிநிலை   வழக்கு:  பொற்  கொல்லர்
பொன்னைப்   பறி  என்றும்,  வண்ணக்கர்  காணத்தை நீலம் என்றும்
வரும். 

வழக்காறு  இருவகைப்படும்: இலக்கண  வழக்கும், இலக்கணத்தொடு
பொருந்தின மரூஉவழக்கும் என. 

இல் முன் என்பதனை  முன்றில்  என்று தலைதடுமாறச் சொல்லுதல்
இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ வழக்கு. 

இனி, சோழனாடு என்பதனைச் சோணாடு என்பது மரூஉ வழக்கு. 

வழக்காறு   இத்துணை   யென்பதில்லை,  சிதைந்தும்  சிதையாதும்
பொருந்தி  நடப்பன  வெல்லாம் அவை யெனப்படும் என்றலும் ஒன்று.
(17)  

18.  இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
வழக்கா றல்ல செய்யு ளாறே.
 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோவெனின்,   செய்யுட்  காவதோர் முடிபு
கூறுதல் நுதலிற்று. 

உரை:  தமக்கு இனஞ்சுட்டாவாகிப் பண்பு கொண்டு நின்ற பெயர்ச்
சொற்களவை வழக்கினது நெறியல்லன, செய்யுட்கு நெறி என்றவாறு. 

வரலாறு: ‘மாக்கட   னிவந்  தெழிதரு,  செஞ்ஞாயிற்றுக்  கவினை
மாதோ’  (புறம்.  4) எனவும், ‘வெண்கோட் டியானை சேனை படியும்’*
எனவும் வரும். 

‘வழக்காறல்ல’  என்ற   விதப்பினான்,  ‘வடவேங்கடம் தென்குமரி’
என்பன கொள்க. இதுவும் ஒருசார் ஆசிரியன் உரை. 

இனி, ஒருவன் சொல்லுவது: ‘வழக்காறல்ல’ என்பதனை, ‘வழக்காற்றின்
அல்ல’   என   ஐந்தா   முருபு   விரித்து,   ‘அல்ல’  என்பதனைப்
பெயர்ப்படுத்துக் கூறும் ;