பொருளையும் என்பது. பிறவும் அன்ன. (34)
114. கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங்
கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இஃது ஆகுபெயர்க்குப் புறனடை கூறுதல் நுதலிற்று.
உரை : மேற்
சொல்லப்பட்டனவன்றி வரும் ஆகுபெயரும் உள ;
அவற்றையும் சொல்லப்பட்ட இலக்கணத்தான் உணர்ந்து கொள்க என்றவாறு.
அவை வருமாறு : யாழ் கேட்டான் ; குழல்
கேட்டான் என்ப,
அவற்றினாகிய ஓசை கேட்டாரை.
பசுப் போல்வானைப் பசு என்ப ; பாவை போல்வாளைப் பாவை
என்ப.
இனி, எண்ணிற் கேதுவாகிய இடங்களையும் ஒன்று, பத்து, நூறு என்ப. இனி, ‘எழுத்து’ (தொல். எழுத்து. நூன்மரபு - 1) என்பதும் அது. பிறவும் அன்ன.
இனிக், கிளந்தவல்ல பிற என்னாது, வேறு என்றதனால், ஆகுபெயர்கள் ஈறுதிரியும் என்பது காட்டுக. (35)
மூன்றாவது வேற்றுமை மயங்கியல் முற்றிற்று.
|