இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1211
Zoom In NormalZoom Out


நான்காவது 

விளி மரபு 

115. விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு
தெளியத் தோன்று மியற்கைய வென்ப.
 

என்பது சூத்திரம். 

இவ்வோத்து என்ன  பெயர்த்தோ  வெனின்,  விளி  வேற்றுமையது
இலக்கணம் உணர்த்தினமையின், விளிமரபு என்னும் பெயர்த்து. 

இனி,   இத்    தலைச்சூத்திரம்     என்னுதலிற்றோ    வெனின்,
விளிவேற்றுமையது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. 

உரை :  விளி  என்பன  தம்மை  ஏற்கும்பொருளொடு  யாப்புறத்
தோன்றும் தன்மைய என்றவாறு. 

தன்மைய   என்றான்,  விளி  பெயரொடு  கொள்ளும் என்பதூஉம்,
கொள்ளுங்கால்    ஏற்கும்   என்பதூஉம்,   பெயரொடு   கொள்ளும்
என்பதூஉம் சொல்லப்பட்டதாம். 

‘தெளியத்   தோன்றும்’    என்றது,     விளியை     வேற்றுமை
அன்றென்பாரும் உளர், அது மறுத்து வேற்றுமையே எனற்கு என்பது. 

‘எனப்படுப’     என்று பன்மை கூறினார். ஈறுதிரிதல், ஈற்றயனீடல்,
பிறிதுவந்தடைதல்,  இயல்பாதல் என நான்கு பகுதியவாகலான் என்பது.
                                                       (1) 

116. அவ்வே
இவ்வென வறிதற்கு மெய்பெறக் கிளப்ப.
 

இச்       சூத்திரம்      என்னுதலிற்றோ      வெனின்,     மேற்
சொல்லப்பட்டனவற்றை   இனிச்   சொல்லுப  என்பது  உணர்த்துதல்
நுதலிற்று. 

உரை  :  அவை,  இவையென  அறிதற்கு  வழக்குப்பெற  இனிச்
சொல்லப்படும் என்றவாறு.                                  (2) 

117. அவைதாம்
இ உ ஐஓ என்னு மிறுதி
யப்பா னான்கே யுயர்திணை மருங்கின்
மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே.
 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  விளி என்பனதாம் இவை
என்பது உணர்த்துதல் நுதலிற்று. 

உரை  :  உயிரெழுத்தினுள் உயர்திணைப்பெயர்க்கு  விளியேற்கும்
எழுத்தாவன இவை என்றவாறு. 

‘உயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய’