இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1213
Zoom In NormalZoom Out


றன்றிப்   பிறவாற்றானும்  விளியேற்கும்  என்றற்குச்  சொல்லப்பட்டது
என்றவாறு. 

கணி - கணியே என, இகர ஈறு ஈகாரப் பேறின்றி ஏகாரமும் பெற்று
விளியேற்கும் என்பது. (7)

122. அளபெடை மிகூஉ மிகர விறுபெய
ரியற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப.
 

இச்   சூத்திரம்   என்னுதலிற்றோ   வெனின்,   எய்தியது  விலக்கல்
நுதலிற்று. 

உரை : அளபெடை இகரம் ஈறாயின்  இயல்பாயே  விளி  யேற்கும்
என்றவாறு. 

வரலாறு :  தொழீஇ என வரும். பெயர்நிலையும்  விளி  நிலையும்
அதுவே நிற்குமாறு. 

இனிச்,  ‘செயற்கைய’ என்றதனால், இரண்டு மூன்று மாத்திரைபெற
எழுதுவாரும்,  ஐந்துமாத்திரை  பெற  எழுதுவாரும் என இருதிறத்தார்
ஆசிரியர் என உணர்க. (அ) 

123. முறைப்பெயர் மருங்கி னையெ னிறுதி
யாவொடு வருதற் குரியவு முளவே.
 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  இஃது  இறந்தது  காத்தல்
நுதலிற்று. 

உரை :  மேல்  ஐ  ஆய்  ஆகும்   என்றார்;   இனி,  முறைப்
பெயர்க்கண்ணாயின் ஐ யீ று ஆவொடு வருவனவும் உள என்றவாறு. 

வரலாறு :  அன்னை -  அன்னா  என்றும்,  அத்தை  -  அத்தா
என்றும் ஆக என்பது. 

124. அண்மைச் சொல்லே யியற்கை யாகும். 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  இதுவும் இறந்தது காத்தல்
நுதலிற்று. 

உரை : அணியாரைக்    கூவுமிடத்து     அவை   இயல்பேயாய்
விளியேற்கும் என்றவாறு. 

வரலாறு : நம்பி வாழி, நங்கை வாழி, வேந்து வாழி என வரும்.
(10) 

125. னரலள வென்னு மந்நான் கென்ப
புள்ளி யிறுதி விளிகொள் பெயரே.
 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ வெனின், உயர்திணைக்கட் புள்ளியீறு
விளி யேற்பன இவை யென உணர்த்துதல் நுதலிற்று.

வரலாறு