இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1214
Zoom In NormalZoom Out


முன்னர்க் காட்டுதும். (11) 

126. ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா. 

இச்   சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  எய்தாததெய்து  வித்தல்
நுதலிற்று; ஐயமறுத்தது எனினும் அமையும். 

உரை : மேற் சொல்லப்பட்ட நான்கல்லாப்  புள்ளியீறு  விளியேலா
உயர்திணைக்கண் என்றவாறு. 

மற்று, ஆவனகூற அமையாதோ வெனின், ‘ஏனைப் புள்ளி யீறுவிளி
கொள்ளா’  என,  இன்னும்  மேற்கூறிய  புள்ளி  யீறு  அவ்வாறன்றிப்
பிறவாறு விளியேற்றலுடைய என்றற்குக் கூறினார் என்பது. 

வரலாறு : பெண்டிர் - பெண்டிரே  எனவும், தம்முன்  - தம்முனே
எனவும் வரும். பிறவும் அன்ன. ஏனைப்புள்ளியும் ஆவதுண்டு. 

‘விளங்குமணிக் கொடும்பூண் ஆய்’ என்பதும்  [புறம்  130] பிறவும்
இவ்வாறு வருவன கொள்க. (12) 

127. அன்னென் னிறுதி யாவா கும்மே. 

இச்   சூத்திரம்   என்னுதலிற்றோ   வெனின்,  நிறுத்த  முறையானே
னகரவீறு விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. 

உரை :   அன்   என்னும்   பெயரிறுதி  ஆவாய்  விளியேற்கும்
என்றவாறு. 

வரலாறு : சோழன்  -  சோழா, சேர்ப்பன் - சேர்ப்பா என வரும்.
(13) 

128. அண்மைச் சொல்லிற் ககரமு மாகும். 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  எய்தியது  ஒரு  மருங்கு
மறுத்தல் நுதலிற்று. 

உரை : அணியாரைக் கூவுமிடத்து அன் ஈறு திரிந்து  அகரமாயும்
விளியேற்கும் என்றவாறு. 

வரலாறு : ஊரன் - ஊர, சேர்ப்பன் - சேர்ப்ப என வரும். (14) 

129. ஆனென் னிறுதி யியற்கை யாகும். 

இச்    சூத்திரம்   என்னுதலிற்றோ   வெனின்,   இதுவும்   னகரவீறு
விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. 

உரை : ஆன் என் னகரவீறு இயல்பாய் விளியேற்கும் என்றவாறு. 

வரலாறு : சேரமான்,