இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1215
Zoom In NormalZoom Out


மலையமான்   என   இருநிலைமைக்கண்ணும்   அதுவே   நிற்குமாறு
என்பது. (15) 

130. தொழிலிற் கூறு மானென் னிறுதி
யாயா கும்மே விளிவயி னான.
 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  எய்தியது  ஒரு  மருங்கு
மறுத்தல் நுதலிற்று. 

உரை :  ஆன்    என்   இறுதி   தொழிற்பெயராயின்  ஆயாய்
விளியேற்கும் என்றவாறு. 

வரலாறு : உண்டான் - உண்டாய் என வரும். 

இனி,   ‘விளிவயினான’  என்றதனான்,  வாயிலான்  -  வாயிலாய்,
பூயிலான்  -  பூயிலாய் என, இவ்வாறு பெயரினாகிய பெயரும் ஆயாய்
விளியேற்கும் என்பாரும் உளர். (16) 

131. பண்புகொள் பெயரு மதனோ ரற்றே. 

இச்   சூத்திரம்   என்னுதலிற்றோ   வெனின்,   இதுவும்   எய்தியது
ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று. 

உரை :  அவ்வான்   இறுதி  பண்புகொள்  பெயராயின் ஆயாய்
விளியேற்கும் என்றவாறு. 

வரலாறு : கரியான் - கரியாய்,  செய்யான்-செய்யாய்  என  வரும்.
பிறவும் அன்ன. (17) 

132. அளபெடைப் பெயரே யளபெடை யியல. 

இச்     சூத்திரம்     என்னுதலிற்றோ     வெனின்,     னகரவீற்று
அளபெடைக்குரிய இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. 

உரை :  கரவிறுதி     அளபெடைப்பெயரும்  மேல்   இகரவீற்று
அளபெடை யேற்றவாறு ஏற்க என்றவாறு. 

வரலாறு : அழாஅன், புழாஅன் என வரும். (18) 

133. முறைப்பெயர்க் கிளவி யேயொடு வருமே. 

இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இறந்தது காத்தல் நுதலிற்று. 

உரை : னகாரவீற்று முறைப் பெயராமே  யெனின்  ஏகாரம் பெற்று
விளியேற்க என்றவாறு. 

வரலாறு  : மகன் - மகனே, மருமகன் - மருமகனே என வரும். 

மற்று  இவை  இருதிணைக்கும்  உரியவாம்   பிறவெனின்,   உரிய
வாயினும் முன்னர், ‘விளம்பிய நெறிய விளிக்குங் கா