யேற்கும் என்றவாறு.
வரலாறு :
பெண்பால், ஆண்பால் ; எம்மாள், கோமாள், கடியாள்,
பெரியாள் என வரும். (28)
143. வினையினும் பண்பினு
நினையத் தோன்று மாளெ னிறுதி
யாயா கும்மே விளிவயி னான.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று.
உரை :
ஆள் என்னிறுதி வினைப்பெயரும் பண்புப் பெயரும்
ஆயின் ஆயாய் விளியேற்கும் என்றவாறு.
வரலாறு :
உண்டாள் - உண்டாய் எனவும் ; கரியாள் - கரியாய்
எனவும் வரும். (29)
144. முறைப்பெயர்க் கிளவி முறைப்பெய ரியல.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் எய்தியது ஓர் மருங்கு மறுத்தல் நுதலிற்று.
உரை : மேல் னகரவீற்று
முறைப்பெயர் ஏகாரம் பெற்று
விளியேற்றது ; இதுவும் ஏகாரம் பெற்று விளியேற்க என்றவாறு.
மகள் - மகளே, மருமகள் - மருமகளே என வரும்.
மற்று, இவை இருதிணைக்கும் உரிய பெயர் பிறவெனின், முன்னர் (சூ. 19) விடுத்தாங்கே விடுக்க. (30)
145.
சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரு
முற்கிளந் தன்ன வென்மனார் புலவர்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், எய்தியது விலக்கல் நுதலிற்று.
உரை : மேல் னகரவீற்றுச்
சுட்டுப்பெயரும் வினாவின் பெயரும்
விளியேலா என்றார் ; அவைபோல இவையும் விளியேலா என்பது உணர்த்துதல் ஆயிற்று.
அவையாவன : அவள், இவள், உவள் ; யாவள் என்பன. (31)
146.
அளபெடைப் பெயரே யளபெடை யியல.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், அளபெடைக்கு உரிய இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
மாட்டேற்றுவகையான், உயர்திணை னகர ஈற்று அளபெடை
விளியேற்றவாறே இவையும் விளியேற்க என்பது உணர்த்தியவாறு.
வரலாறு :
‘மாஅனின் னிறம்போன் மழையிருளிற் பட்டதே
கோஒள் குளக்கோடு கொண்டு.’
என்பதனுள், மாஅல்,
|