மையைக் குறித்து நின்ற, ன, ள, ர என்னும் மூன்று புள்ளியையும்இறுதியாகவுடைய சொல்லும், அவை போல்வன பிறவுமாகியபெயர்ச்சொல்லும் வருமாயின் விளியொடு பொருந்துதல் இலஎன்றவாறு.
வரலாறு : தமன் - தமள் - தமர் ; நமன் - நமள் - நமர் ; நுமன் - நுமள் - நுமர் ; எமன் - எமள்- எமர் ; தம்மான் - தம்மாள் - தம்மார் ; நம்மான் - நம்மாள் - நம்மார் ; நும்மான் - நும்மாள் - நும்மார் ; எம்மான் - எம்மாள் - எம்மார் என வரும்.
‘அன்ன பிறவும்’ என்றதனான், மற்றையான் - மற்றையாள் - மற்றையார் எனவும் வருவன கொள்க. (37)
நான்காவது விளிமரபு முற்றிற்று.