இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1225
Zoom In NormalZoom Out


உரை:  இருதிணைப்  பிரிந்த  ஐம்பாற்  கிளவியாதற்குப்  பொருள்
உரியன உரியவாம் என்றவாறு. 

வரலாறு:     அவன்,  பெண்மகன்,  சாத்தன்  என  னகார  ஈறு
ஆடுஉவிற்கும்  மகடூஉவிற்கும்,  அஃறிணை  யாண்பாற்கும் உரித்தாய்
வருதலானும், 

அவள், மக்கள்,    மகள்    என   ளகார   ஈறு   மகடூஉவிற்கும்
பல்லோர்க்கும், அஃறிணைப் பெண்பாற்கும் உரித்தாய் வருதலானும், 

பெண்டாட்டி,     நம்பி  எனவும்,  ஆடூஉ, மகடூஉ எனவும் வரும்
இகாரவீறும்   உகாரவீறும்   இருபாற்கும்   உரியவாய்   வருதலானும்,
வினைச்சொற்போல   இன்ன   ஈறு  இன்னபாற்கு  உரித்து  என்னப்
பெயர்ச்சொல்   ஈறுபற்றி   யுணர்த்தலாகாமையின்,  ‘உரியவை  யுரிய’
என்றார். பிறவும் அன்ன. (7) 

159. அவ்வழி
அவனிவ னுவனென வரூஉம் பெயரு
மவளிவ ளுவளென வரூஉம் பெயரும்
மவரிவ ருவரென வரூஉம் பெயரும்
யான்யாம் யாவள் யாவ ரென்னு
மாவயின் மூன்றோ டப்பதி னைந்தும்
பாலறி வந்த வுயர்திணைப் பெயரே. 

உரை:  மூவிற்றாக மேற் சொல்லப்பட்ட பெயருள், அவன் என்பது
முதலாக   யாவர்   என்பது   ஈறாகச்  சொல்லப்பட்ட  பதினைந்தும்
பால்விளங்கநிற்கும் உயர்திணைப்பெயர் என்றவாறு. (8) 

160. ஆண்மை யடுத்த மகனனென் கிளவியும்
பெண்மை யடுத்த மகளென் கிளவியும்
பெண்மை யடுத்த விகர விறுதியும்
நம்மூர்ந்து வரூஉ மிகரவை காரமு
முறைமை சுட்டா மகனு மகளு
மாந்தர் மக்க ளென்னும் பெயரு
மாடூஉ மகடூஉ வாயிரு கிளவியுஞ்
சுட்டுமுத லாகிய வன்னு மானு
மவைமுத லாகிய பெண்டென் கிளவியு
மொப்பொடு வரூஉங் கிள