இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1226
Zoom In NormalZoom Out


    வியொடு தொகைஇ
யப்பதி னைந்து மவற்றோ ரன்ன. 

உரை: இப்பெயர்  பதினைந்தும்   மேற்   கூறப்பட்டன   போலப்
பாலறியவந்த உயர்திணைப்பெயராம் என்றவாறு. 

ஆண்மகன் என்பதும் பெண்மகள் என்பதும், 

பெண்டாட்டி என்பதும் நம்பி என்பதும் நங்கை என்பதும், 

முறைமைப் பெயரல்லாத மகன் மகள் என்பனவும், 

மாந்தர் மக்கள் என்பனவும், 

ஆடூஉ மகடூஉ என்பனவும், 

சுட்டு முதலாகிய, அவ்வாளன்  இவ்வாளன் உவ்வாளன் என்பனவும்,
அம்மாட்டான் இம்மாட்டான் உம்மாட்டான் என்பனவும், 

சுட்டு  முதலாகிய,   அப்பெண்டு   இப்பெண்டு      உப்பெண்டு
என்பனவும், 

பொன்னன்னான், பொன்னன்னாள்,   பொன்னன்னார்  என  வரும்
உவமக்கிளவியும் உயர்திணைப் பெயராம் என்றவாறு. (9) 

161.  எல்லாரு மென்னும் பெயநிலைக் கிளவியு
மெல்லீரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும்
பெண்மை யடுத்த மகனென் கிளவியு
மன்ன வியல வென்மனார் புலவர்.
 

உரை:  எல்லாரும் எனவும் எல்லீரும் எனவும் பெண்மகன் எனவும்
வரும் மூன்றும் மேற்கூறப்பட்டன போலப் பாலறியவந்த உயர்திணைப்
பெயராம் என்றவாறு. 

புறத்துப்போய் விளையாடும் பேதைப்  பருவத்துப் பெண்பாலாரைப்,
‘பெண்மகன்’ என்று வழங்குப. பிறவும் அன்ன. (10) 

162. நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே
பல்லோர்க் குறித்த முறை நிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினை நி