இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1227
Zoom In NormalZoom Out


லைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயரே
கூடிவரு வழக்கி னாடியற் பெயரே
யின்றிவ ரென்னு மெண்ணியற் பெயரோ
டன்றி யனைத்து மவற்றியல் பினவே. 

உரை: நிலப்பெயர்  முதலாகச்  சொல்லப்பட்டனவும் மேலனபோலப்
பாலறியவந்த உயர்திணைப்பெயராம் என்றவாறு. 

நிலப்பெயர் -- அருவாளன், சோழியன் என்பன. 

குடிப்பெயர் -- மலையமான், சேரமான் என்பன. 

குழுவின்பெயர் -- அவையத்தார், அத்திகோசத்தார் என்பன. 

வினைப்பெயர் -- தச்சன், கொல்லன் என்பன. 

உடைப்பெயர்   --   அம்பர் கிழான், பேரூர்  கிழான்  என்பன;
வெற்பன், சேர்ப்பன் என்பனவும் அவை. 

பண்புகொள் பெயர் -- கரியான், செய்யான் என்பன. 

பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயர் --  தந்தையர்,  தாயர்
என்பன. 

பல்லோர்க் குறித்த சினைநிலைப்பெயர் -- பெருங்காலர்,
பெருந்தோளர் என்பன. 

பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயர் -- பார்ப்பார், அரசர்,
வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர் என்பன. 

‘பல்லோர்க் குறித்த’ என்று விசேடித்தலான், இம் மூவகைப் பொருள்
ஒருமைப்பெயர் இரண்டு திணைக்கும் உரியவாம். 

கூடிவரு   வழக்கின்   ஆடியற்   பெயர் --  பட்டி  புத்திரர்,
சங்கிராமத்தார் என்பன. 

இன்றிவர் என்னும் எண்ணியற் பெயர்-- ஒருவர், இருவர்,மூவர்,
முப்பத்து மூவர் என்பன. 

‘இன்றிவர்’ என்பது,   ‘இத்   துணைவர்’   என்னும்   பொருட்டுப்
போலும். (11) 

163. அன்ன பிறவும் உயர்திணை மருங்கிற்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
வென்ன பெயரு மத்திணை யவ்வே.
 

உரை: மேற் சொல்லப்பட்ட பெயர் போல்