இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1229
Zoom In NormalZoom Out


    பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரு
மினைத்தெனக் கிளக்கு மெண்ணுக்குறிப் பெயரு
மொப்பி னாகிய பெயர்நிலை யுளப்பட
வப்பா லொன்பது மவற்றோ ரன்ன. 

உரை:     பல்ல  என்பது முதலாகக் கூறப்பட்ட ஒன்பது பெயரும்
மேற்கூறிய    அஃறிணைப்   பெயர்போலப்   பாலுணர்த்தி   நிற்கும்
என்றவாறு. 

பல்ல, பல, சில, உள்ள,  இல்ல என்னும் ஐந்தும் தம்மை யுணர்த்தி
நின்றன. 

வினைப்பெயர்க் கிளவி யாவது: வருவ, செல்வ என்பன. 

பண்புகொள் பெயர் : கரியது, கரிய என்பன. 

எண்ணுக்குறிப் பெயர்: ஒன்று, பத்து என்பன. 

ஒப்பினாகிய பெயர் :   பொன்னன்னது,  பொன்னன்ன  என்பன.
(14) 

166. கள்ளொடு சிவணு மவ்வியற் பெயரே
கொள்வழி யுடைய பலவறி சொற்கே. 

உரை:     கள்   என்னும்   ஈற்றோடு  பொருந்தும்  அஃறிணை
இயற்பெயராவன:  ஆ,  நாய்,  குதிரை,  கழுதை, தெங்கு, பலா, மலை,
கடல் என்னுந் தொடக்கத்துச் சாதிப்பெயர், ஒருமைக்கும் பன்மைக்கும்
பொதுவாய்  நிற்றலின்,  இயற்பெயர்  என்றார்.  இவை,  கள் என்னும்
ஈற்றவாய்  ஆக்கள், குதிரைகள் என நின்றவழிப் பன்மை விளக்கலின்
பலவறிசொல்லாயினவாறு கண்டுகொள்க. (15) 

167. அன்ன பிறவு மஃறிணை மருங்கிற்
பன்மையு மொருமையும் பாலறி வந்த
வென்ன பெயரு மத்திணை யவ்வே. 

உரை:   மேற்கூறப்பட்ட பெயர் போல்வன பிறவும் அஃறிணைக்கட்
பன்மையும்  ஒருமையும்  ஆகிய  பால்  விளங்க  வந்தவை  எல்லாப்
பெயரும் அத்திணைக்கு உரிய என்றவாறு. 

‘அன்னபிறவும்’ என்றதனாற்   பெறுவன:  பிறிது,  பிற,  மற்றையது,
மற்றையவை, பல்லவை, சில்