தி சாந்து அரைக்கும் என்றவழி, யாழ் எழுதலும், சாந்து அரைத்தலும் ஆகிய, அஃறிணைக்கு ஏலாது, ஒருவற்கும் ஒருத்திக்கும் ஏற்றலின், உயர்திணை ஒருமைப்பால் விளங்கியவாறு கண்டு கொள்க. ‘நிகழூஉநின்ற’ என்பது, நிகழாநின்ற என்றவாறு. (19)
171.
இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளவி தாமே தானே
யெல்லா நீயிர் நீயெனக் கிளந்து
சொல்லிய வல்ல பிறவு மாஅங்
கன்னவை தோன்றி னவற்றொடுங் கொளலே.
இச்சூத்திரம், விரவுப் பெயர் பால்தெரிய நிற்குமாறு உணர்த்தி, இனி, அவை தம்மை யுணர்த்துவான் எடுத்துக் கொண்டார்.
உரை: இயற்பெயர் முதலாக நீ என்பது ஈறாக எடுத்துச் சொல்லப்பட்டவல்லாத அன்னபிறவும் ஆண்டு வருமாயிற் சொல்லப்பட்டவற்றொடு கூட்டுக என்றவாறு.
வரலாறு:
இயற்பெய ராவன -- சாத்தன், கொற்றன் என்னும் இரண்டு பெயர்.
சினைப்பெய ராவன -- பெருங்காலன், முடவன் என்பன.
சினைமுதற்பெய ராவன -- சீத்தலைச் சாத்தன், கொடும்புறமருதி எனச் சினைப்பெயரொடு தொடர்ந்து வரும் முதற்பெயர்.
முறைப்பெய ராவன -- தந்தை, தாய் என முறை பற்றி
முறையுடைய பொருண்மேல் வருவன.
அல்லன வந்தும் தம்மை உணர்த்தி நின்றன வாதலின் தாம் என்பது முதலாகிய சொல்லேயாம்.
அன்ன பிறவும் என்பதனால் மக, குழவி என்பனவுங் கொள்க.
‘குழவியு மகவு வாயிரண் டல்லன
கிழவ வல்ல மக்கட் கண்ணே’ (தொல் - மரபியல் - 23)
என்று உயர்திணைக்கும் எய்துவித்தார். (20)
172.
அவற்றுள்
நான்கே யியற்பெயர் நான்கேசினைப்பெயர்
நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளவி யிரண்டா கும்மே
யேனைப் பெயரே தத்த மரபின.
|