உரை: மேற்கூறிய விரவுப்பெயருள் இயற்பெயரும் சினைப்பெயரும் சினைமுதற் பெயரும் ஓரோவொன்று நான்காம்; முறைப்பெயர் இரண்டாம்; ஒழிந்த ஐந்து பெயரும் தத்தம் இலக்கணத்தனவாம் என்றவாறு.
தத்தம் இலக்கணம் என்றது, அவை ஓரொன்றாகி நிற்கும் என்றவாறாம். தனிப்பெயர் ஐந்தும் விரவுப் பெயர் பதினான்கும் ஆக விரவுப்பெயர் பத்தொன்பது என்றவாறாம். (21)
173.
அவைதாம்
பெண்மை யியற்பெய ராண்மையியற்பெயர்
பன்மை யியற்பெய ரொருமையியற் பெயரென்
றந்நான் கென்ப வியற்பெயர் நிலையே. (22)
174.
பெண்மைச் சினைப்பெய ராண்மைச் சினைப்பெயர்
பன்மைச் சினைப்பெய ரொருமைச்சினைப் பெயரென்
றந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே. (23)
175.
பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே
யாண்மை சுட்டிய சினைமுதற் பெயரே
பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே
யொருமை சுட்டிய சினைமுதற் பெயரென்
றந்நான் கென்ப சினைமுதற் பெயரே. (24)
176.
பெண்மை முறைப்பெய
ராண்மைமுறைப் பெயரென்
றாயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே.
இவை இயற்பெயர் முதலாகிய நான்கன் விரியாகிய பதினான்கும்
இது என உணர்த்தியவாறு.
இவற்றுக்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும். (25)
177.
பெண்மை சுட்டிய வெல்லாப் பெயரு
மொன்றற்கு மொருத்திக்கு மொன்றிய நிலையே.
மேற் கூறிய பதினான்கு பெயரும் இருதிணையும் பற்றிப் பால் உணர்த்துமாறு உணர்த்திய எடுத்துக் கொண்டார்.
உரை: அவை பெண்மைப்பெயர் நான்கும், ஆண்மைப்பெயர் நான்கும், பன்மைப்பெயர் மூன்றும் ஒருமைப்பெயர் மூன்றும் ஆம்.
பெண்மைபற்றி வ
|