ணைக் குரிமையு
மாயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையு
மம்மூ வுருபின தோன்ற லாறே.
உரை :
குறிப்புப் பொருண்மைக்கண்ணும் தொழிற் பொருண்மைக்கண்ணும் தோன்றிக் காலத்தொடு வரூஉம் எல்லாச் சொல்லும் உயர்திணைக்குரியனவும், அஃறிணைக்குரியனவும், இரண்டு திணைக்கும் ஒப்ப உரியனவும் என மூன்று கூற்றனவாம் தோன்றுநெறிக்கண் என்றவாறு. (4)
199.
அவைதாம்
அம்மா மெம்மே மென்னுங் கிளவியு
மும்மொடு வரூஉம் கடதற வென்ன
மந்நாற் கிளவியொ டாயெண் கிளவியும்
பன்மை யுரைக்குந் தன்மைச் சொல்லே.
என் நுதலிற்றோவெனின், நிறுத்த முறையானே உயர்திணைவினை யுணர்த்துகின்றார் ; அவைதாம் இருவகைய, தன்மை வினையும் படர்க்கை வினையும் என. தன்மை வினையும் இருவகைத்து, பன்மைத் தன்மையும், ஒருமைத் தன்மையுமென ; இச் சூத்திரத்தாற் பன்மைத் தன்மை உணர்த்துகின்றார்.
உரை :
மேல் மூன்றுவகை எனப்பட்ட வினைச் சொற்றாம், அம் -ஆம், எம் - ஏம் என்னும் ஈற்றவாகிய சொல்லும், உம்மொடு வரூஉம் க-ட-த-றவாகிய கும்மும், டும்மும், தும்மும், றும்மும் என்னும் ஈற்றவாகிய சொல்லும் என அவ்வெட்டும் பன்மையுணர்த்துந் தன்மைச் சொல்லாம் என்றவாறு.
அம், ஆம் என்பன முன்னின்றாரை யுளப்படுக்கும், தமராயவழி படர்க்கையாரையும் உளப்படுக்கும்.
எம், ஏம் என்பன படர்க்கையாரை உளப்படுக்கும்.
உம்மொடு வரூஉங் க-ட-
|