த-ற அவ்விருவரையும் ஒருங்கு உளப்படுத்தலும் தனித்து உளப்படுத்தலும் உரிய.
அம் - ஆம், எம் - ஏம் என்பன மூன்று காலமும் பற்றி வரும்.
உம்மொடு வரூஉங் க-ட-த-ற எதிர்காலம் பற்றி வரும்.
வரலாறு :
அம் - உண்டனம், உண்ணாநின்றனம், உண்குவம் எனவும் ;
ஆம் -- உண்டாம், உண்ணாநின்றாம், உண்பாம் எனவும் ;
எம் -- உண்டனெம், உண்ணாநின்றனெம், உண்குவெம் எனவும் ;
ஏம் -- உண்டேம், உண்ணாநின்றேம், உண்பேம் எனவும் வரும்.
உம்மொடு வரூஉங் கடதற - உண்கும், உண்டும், வருதும், சேறும் எனவும் ; உரிஞதும், திருமுதும் என ஏற்றவழி உகரம் பெற்றும் வரும். இவை நான்கும் எதிர்காலம் பற்றி வரும்.
உம்மை யடைந்து வந்த க - ட - த- றக்கள், ‘உம்மொடு வரூஉங் க - ட - த - ற’ ஆயின. இக் காட்டிய எட்டு வினைச்சொல்லும் உயர்திணைப் பன்மை வினைச்சொல்லை யுணர்த்துந் தன்மைச்சொல் என்றவாறு.
இவை தன்னொடு முன்னின்றானையும் உளப்படுக்கும், படர்க்கையானையும் உளப்படுக்கம், அவ் விருவரையும் உளப்படுக்கு மென்பது,
‘அவற்றுள், பன்மை யுரைக்கும் தன்மைக் கிளவி’
[தொல். சொல். வினையியல் - 12]
என்னுஞ் சூத்திரத்துட் சொல்லுதும். (5)
200.
கடதற வென்னும்
அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமொ
டென்னே னல்லென வரூஉ மேழுந்
தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே.
என் நுதலிற்றோவெனின், மேல் உளப்பாட்டுத் தன்மை கூறினார் ; இது, தனித் தன்மை வினைச்சொல் இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
க - ட - த - ற என்னும் அந் நான்கு ஊர்ந்த குற்றியலுகரம் என்றான் அவையிற்றின் ஈறு பற்றி.
அவை வருமாறு :
உண்கு, உண்டு, வருது, சேறு என வரும். என், ஏன் என்பன மூன்று காலமும் பற்றி வரும் அவை உண்டனென், உண்ணாநின்றனென், உண்குவென் எனவும் ; உண்டேன், உண்
|