இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1244
Zoom In NormalZoom Out


உளப்படுக்கும். 

எம்    ஏம் என்பன   இரண்டும்   தன்னொடு   படர்க்கையானை
உளப்படுக்கும். 

உம்மொடு வரூஉம்   க   ட   த   றக்கள்   முன்னின்றானையும்
படர்க்கையானையும் உளப்படுக்கும் என்பது. 

இவ்வுளப்படுதற்குத் திரியுந்   திரிபு   அவையுடைய   ;   வழூஉத்
திரிபன்று ஈண்டுக் கருதியது என்பது. (12) 

207. யாஅ ரென்னும் வினாவின் கிளவி
அத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே. 

இச்சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், உயர்திணை மூன்று பாற்கும்
பொதுவாகியதோர் வினைக் குறிப்புச்சொல் உணர்த்துதல் நுதலிற்று. 

உரை : யார்   என்னும்   வினாவின்பாற்றாய்   வருகின்ற  சொல்
உயர்திணை மூன்றுபாற்கும் உரித்து என்றவாறு. 

வரலாறு : யார் அவன், யார் அவள், யார் அவர் என வரும். 

மற்றிது வினைக்குறிப்பே யெனின், முன்னர், 

‘அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானும்’
                         [ தொல் - சொல். 210 ]
 

என்று      உயர்திணைக்குறிப்பு    ஓதும்வழியே    வைக்க  எனின்,
உயர்திணை  முப்பாற்கும்  தன்  ஈறு  திரியாது  நிற்றற் சிறப்புநோக்கி
ஈண்டு வைத்துணர்த்தினார் என்பது. (13) 

208. பாலறி மரபி னம்மூ வீற்று
மாவோ வாகுஞ் செய்யு ளுள்ளே. 

இச் சூத்திரம்  என்  நுதலிற்றோ  வெனின்,  உயர்திணைப்  பாற்குப்
படுவதோர் செய்யுண்முடிபு கூறுதல் நுதலிற்று. 

உரை   :  பாலறி  மரபின்  அம்மூவீற்றும்  என்பன  --  மேல்
உணர்த்திப்போந்த   னஃகான்  ஒற்றும்,  ளஃகான்  ஒற்றும்,  ரஃகான்
ஒற்றும்   ஆயின   அவை   மூன்றிற்றுக்கண்ணும்   நின்ற  ஆகாரம்
ஓகாரமாம் செய்யுளுள் என்றவாறு. 

வரலாறு : ‘வினவிநிற்  றந்தான்’  என்பது,  ‘வினவி  நிற்றந்தோன்’
[அகம் - 48 ] எனவும், 

‘நகூஉப் பெயர்ந்தாள்’ என்பது, ‘நகூஉப்  பெயர்ந்தோள்’ [ அகம் -
248] எனவும், 

‘சென்றா ரன்பிலர்’ என்பது, ‘சென்றோ ரன்பிலர்’  [  அகம் - 31 ]
எனவும் வரும். 

செய்யுளுள் எங்கும்    ஆ    ஓவாக    என்றவாறு.    ஆவாகக்
கொள்ளாதவிடத்தா