உரை :
அக்கூறப்பட்ட மூன்றுமன்றி, ஒழிந்து நின்ற வினையெச்சமாயினவெல்லாம், அம்மூன்று போலத் தம்தம் வினைமுதல் கொண்டு முடிதலும் அவ்விடத்தின் வந்து பொருந்திய பிறவினையான் முடிதலும் உடைய என்றவாறு.
இனி, அவை வினைமுதலானே முடியுமாறு : மழை பெய்தென வளம் பெற்றது ; மழை பெய்யப் பயிர் எழுந்தது என வரும். பிறவும் அன்ன.
இனி ஆன்வந்து இயையும் வினைநிலையான் முடிவன வருமாறு : மழை பெய்தென வுலகமார்ந்தது, மரங்குழைத்தது எனவரும். பிறவும் அன்ன.
இனித், ‘தாமியன் மருங்கின்’ என்றதனால், உழுது வருதல், உழுது வந்தென் என வினையெச்சம் தொழிற் பெயரொடு முடிதலும் முடிக என்றுகொள்க.
மற்று, ஏனையெச்சங் கொடாதே ஈண்டு இலேசு காட்டுவதெனின், ‘தானியன் மருங்கின்’ என்னாது, ‘தாமியன் மருங்கின்’ என்றதனான், அது முதனிலை மூன்றெச்சங்களும் தொழிற்பெயரொடு முடிதலும் முடிக என்றற்குச் சொல்லப்பட்டது. (33)
228.
பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி
சொன்முறை முடியா தடுக்குந வரினு
முன்னது முடிய முடியுமன் பொருளே.
இச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், இன்னும் அவ் வெச்சங்கடிறத்தே படுவதொரு முடிபுகூறுதல் நுதலிற்று.
உரை :
பல எச்சம் உடனடுக்கிவந்து பின் இறுதிக்கண் ஒன்றற்கேற்ற முடிபு ஏற்றக்கால் அதனால் அவ் வெச்சமெல்லாம் முடிந்த பொருளவாகி முடிபுகொள்ளும் என்றவாறு.
வரலாறு:
உழுதுண்டு தின்றோடிப் பாடி வந்தான் என வரும். இஃது ஓரினத்து எச்சம் பல அடுக்கி வந்தது. அவற்றுள், பாடி என்பது வந்தான் என்னும் முடிபுகொண்டு முடிந்தது; அம்முடிபே அவ்வடுக்கிநின்ற பிறவெச்சங்கட்கும் முடிபாயிற்று என்றவாறு.
எனவே, அது மு
|