ந்த பொருளும் காலமும் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும் இவ்வாறு ஒட்டிக் கொள்க.
மற்று, மேற் செய்த என்பது முடிபு கூறப்படாமையின், அதற்கே கூறுக ; செய்யும் என்பதற்கு முடிபு ஈண்டுக் கூறியது என்னை யெனின், செய்யும் என்பது மேல் முற்றுச் சொல்லாய் நின்ற நிலைமை நோக்கிக் கூறினார் ; ஈண்டு எச்சமாய் நின்ற நிலைமை நோக்கிக் கூறுகின்றார் என்பது.
மற்று, முற்றுச் சொல்லாய் நின்ற நிலைமையும், எச்சமாய் நின்ற நிலைமையும் தம்முள் வேற்றுமையறியுமாறு என்னை? இரு நிலைமைக்கண்ணும் பெயர்கொண்டு முடிதல் ஒக்கும் பிறவெனின், செய்யும் என்பது முற்றாய நிலைமைக்கண், பல்லோர்படர்க்கை, முன்னிலை, தன்மை ஒழித்தொழிந்த நான்கு பாலையும் தன் ஈற்றகத்துக்கண்
ஒரு வாற்றாற்கொண்ட அப் பெயரானே யமைந்து முடிபு மாறும் ; அஃது எச்சமாய நிலைமைக்கண் முடிபாய்வரும் பெயர்க்கு அடையாய் நிற்கும். எனவே, எச்சமான நிலைமைக்கண் முடிபாக வரும் பெயர் பயனிலைசெப்பலும் உருபேற்றலும் உடையவாயிற்று. (35)
230.
அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி
முதற்கண் வரைந்த மூவீற்று முரித்தே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், செய்யும் என நின்றதற்கு வேறோர் முடிபு தெரிந்து உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
செய்யும் என்னுஞ்சொல் மேற்சொல்லப்பட்ட நிலத்தொடக்கத்து ஆறனொடு வருவழி மேல்வரைந்தோதப்பட்ட பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மைகளையுங் கொண்டுமுடியும் என்றவாறு.
மேல் முற்றாய் நின்ற நிலை விலக்கினார்
ஆண்டு ; ஈண்டு
எச்சமாய் நின்ற நிலைமைக்கணாயின்
அவ்விடங்கட்கு உரித்தென்றே
யெய்துவித்தார் என்பது.
வரலாறு :
நிலம் -- யான் உண்ணும் இல்லம், யாம் உண்ணும் இல்லம், நீ யுண்ணும் இல்லம், நீயிர் உண்ணும் இல்ல
|