ப்பட்டதன்கண் என்றவாறு ; வினைச்சொற் சுட்டி என்பது -- வினையாகிய சொல்லைச் சுட்டி என்றவாறு ; அப்பண்பு குறித்த என்பது -- ஆண்டை வினையது பயனாகிய குணத்தைக் குறித்த என்றவாறு ; வினைமுதற் கிளவி என்பது -- அச் செய்கை செய்தானை நுதலின சொல் என்றவாறு ; செய்வதில்வழி என்பது -- செய்கை முடியாத நிலைமைக்கண் என்றவாறு ; நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டாகும்மே என்பது -- அது நிகழுங் காலத்துச் சொல்லுஞ் சொற் பிழையாது என்றவாறு.
வரலாறு :
அறஞ்செய்தான் சுவர்க்கம்புகும் ; தாயைக் கொன்றான் நிரயம்புகும் என வரும். அறம் என்பது மிக்கதொன்று, அதனை யாக்கினான் அவ்வுழிச் சேறல் ஒருதலையாகலாற் புகுகின்றாரைக் கண்டான் போலப், ‘புகும்’ என்று நிகழுங்காலத்தாற் சொல்ல அமையும் என்பது. (43)
238.
இதுசெயல் வேண்டு மென்னுங் கிளவி
யிருவயி னிலையும் பொருட்டா கும்மே
தன்பா லானும் பிறன்பா லானும்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், முற்றுச் சொற் பொருள்படும் முறைமை யுணர்த்துதல் நுதலிற்று.
உரை :
இது செயல் என்னும் வாய்பாட்டுச் சொல் சொல்லப்படும் ஒருவன்மேல் நிற்கற்பாலது ; அது பிறவயின் நோக்கிய நிற்கும் என்றவாறு.
வரலாறு :
சாத்தன் ஓதல் வேண்டும் என்றக்கால், ஓதற்றொழில் வேண்டுவான் சாத்தன் என்றுமன் ஆகற்பாலது. அவ்வாறன்றிச் சாத்தன் ஓதல் வேண்டும் ; யார்? தந்தை தாய் எனவும் நிற்கும் என்பது. (44)
239.
வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொ
லெதிர்மறுத் துணர்த்தற் கு
|