தானுஞ் சொல்லப் பிழையாது, யாப்புற்றுப் புலப்படும் என்றவாறு.(46)
241. செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்,இதுவும் ஒரு வகை வழூஉச்சொல்
அமைந்தமை நுதலிற்று.
உரை :
வினைக்கட் செய்கையீறாச் செய்யப்பட்ட
பொருளைத் தான் செய்கை
செய்ததுபோல அதற்குத் தொழிற்
கூறலும் உண்டு,
வழக்கடிப்பட்ட மரபிலக்கணம் என்றவாறு.
வரலாறு : இல்லம் மெழுகிற்று, சோறு அட்டது என வரும். (47)
242. இறப்பே யெதிர்வே யாயிரு காலமுஞ்
சிறப்பத் தோன்று மயங்குமொழிக் கிளவி.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்,
இதுவும் கால வழுக் காத்தல் நுதலிற்று.
உரை ; இறந்த காலமும் எதிர்காலமும் தம்முள் மயங்கி வரப்பெறும் என்றவாறு.
வரலாறு : யாம் பண்டு விளையாடுவது
இக்கா ; பண்டு என்பது
இறந்த காலம், விளையா
|