இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1262
Zoom In NormalZoom Out


டுவது  என்பது எதிர் காலம். விளையாடிற் றென்றுமன் ஆகற்பாலது ; 
அஃது எதிர்காலமும் கொண்டது,  விளையாடுவது  என்று ;   முன்னும்
இறந்தகாலமும் எதிர்காலமும்  நிகழ்காலமும்   எல்லாம்   மயங்குமாறு
சொல்லிவைத்தார், இனி உடன் றொகையாக வுணர்த்தியவாறு.  ‘சிறப்பத்
தோன்றும்’ என்பது சாலவுள்ள வழக்கென்பது. (48) 

243. ஏனைக் காலமு மயங்குதல் வரையார். 

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின்,இனி ஒழிந்தகாலமும் இறப்பினொடு
மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. 

உரை : ஏனைக்காலமும் என்பது  --  ஒழிந்தகாலமும் என்றவாறு;
மயங்குதல்  வரையார்  என்பது  --  மயங்கிவரு மரபினை வரையார்
இவ்விறப்புக் காலத்தோடு என்றவாறு. 

வரலாறு :  யாம்  பண்டு  விளையாடுங்கா ; பண்டு என்பது இறந்த
காலம், விளையாடும் என்பது செய்யும் என்னும் நிகழ்காலச்சொல் வந்து
முடிந்தது. ‘வரையார்’ என்பது மற்றாசிரியர் என்றவாறு. மூன்று காலமும்
மயங்கும்  தம்முள்  என்பதுநேர்ந்தானாம்  ஆசிரியன். அஃதேயெனின்,
மூன்று காலமும் அல்லது  காலமில்லை ;   அவை  மூன்றும் தம்முண்
மயங்குமென்றக்கால், வழூஉவென்ற தில்லையாம் பிறவெனின், அற்றன்று,
எவ்வாறானும்  மயங்கா  மூன்று  காலமும்,   மேற்காட்டின   உதாரண
முடிபுபோல்வன  படுவழி  வழக்கிற்கு   ஏற்றவாறு  மயங்கும்,  அன்ன
வழக்கு உள்வழி என்பது. (49) 

ஆறாவது வினையியல் முற்றிற்று.