இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1265
Zoom In NormalZoom Out


லவா குகநீ துஞ்சு நாளே’ [குறுந்-91] 

என்பது அச்சத்தின்கண் வந்தது. 

‘கொன்னே வந்தது,
கொன்னே போயினார்’

என்பது பயமின்றி வந்தது. 

‘கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ’

என்று,  நலியுங்காலை  யறிந்து  வந்த  வாடை  என்றவாறு;  இது
காலத்தின்கண் வந்தது. 

‘கொன்னூர் துஞ்சினு மியாந்துஞ் சலமே’ [குறுந்-138]

என்பது பெருமைக்கண் வந்தது. (6) 

250. எச்சஞ் சிறப்பே யைய மெதிர்மறை
முற்றே யெண்ணே தெரிநிலை யாக்கமென்
றப்பா லெட்டே யும்மைச் சொல்லே. 

வரலாறு: 

‘சாத்தனும் வந்தான்’ என்றால், அவனை யன்றிப் பிறரையும் வரவு
விளக்குமாகலின், அஃது எச்சவும்மை. 

‘தேவரே தின்னினும்  வேம்பு  கைக்கும்’
                              [நாலடி-மெய்ம்மை-2]

என்பது சிறப்பும்மை. 

‘குறவரும் மருளுங்  குன்றத்துப்  படினே’  [மலைபடு-275] 

என்பதும் அது. 

‘பத்தானும் எட்டானும்’ என்பது  துணியாமைமேல் நின்றமையான்,
ஐயத்தின்கண் வந்தது. 

‘கொற்றன்   வருவதற்கும்   உரியன்’  என்பது,   வாராமையும்
செப்பிநிற்குமாகலின் எதிர்மறையும்மையாயிற்று. 

‘தமிழ்நாட்டு மூவரும் வந்தார்’ என்து முற்றும்மை. 

‘நிலனும் நீரும் தீயும் வளியும்’ என்பது எண்ணும்மை. 

‘நன்றும்  அன்று,  தீதும் அன்று,  இடைநிகர்த்தாயிற்று’  என்பது
தெரிநிலையும்மை. 

இடைநிகர்த்தாயினமை   தெரிந்தொழிந்தனம்,    அவ்விரண்டும்
அத்துணைத்து ஒழியநின்றிலாமையின். 

‘நெடியனும்,வலியனும்’என்பது,ஆயினான் என்னும் ஆக்கத்துக்கண்
வந்தது ஆக்கவும்மை. (7) 

251. பிரிநிலை வினாவே யெதிர்மறை யொழியிசை
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ
யிருமூன் றென்ப வோகா ரம்மே. 

வரலாறு: 

பிரிநிலை  : அவனோ கொண்டான் என்பது.

வினா     : அவனோ அலனோ என்பது. 

எதிர்மறை : யானோ கொண்டேன் என்