பது.
ஒழியிசை :
கொளலோ கொண்டான் என்பது, கோடற்குத் தகுமாயினுங் கொண்டுய்யப் போயினானல்லன் என ஒழிவுபட வந்தமையின் ஒழியிசை யாயிற்று.
தெரிநிலை:‘நன்றோ? அன்று;
தீதோ? அன்று. இடைநிகர்த்தாயிற்று’ என்பது.
சிறப்பு: ‘ஒஓ பெரியன்’
என்பது.
252. தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே
யீற்றசை யிவ்வைந் தேகா ரம்மே.
வரலாறு:
தேற்றம் : ‘அவனே கொண்டான்’ என்பது.
வினா : ‘நீயே கொண்டாய்?’ என, வினாவிச் சொல்வது.
பிரிநிலை: ‘அவனே கொண்டான்’ என்பது;
பலருள் ஒருவனைப் பிரித்துச் சொல்வது.
எண் : ‘நிலனே, நீரே, தீயே, வளியே, ஆகாயமே’ என வரும்.
ஈற்றசை : ‘கடல்போற்
றோன்றல காடிறந் தோரே’[அகம் - 1.]
என வரும் ஈற்றின்கண் என்றவாறு. (9)
253.
வினையே குறிப்பே யிசையே பண்பே
யெண்ணே பெயரோ டவ்வறு கிளவியுங்
கண்ணிய நிலைத்தே யெனவென் கிளவி.
வரலாறு:
வினை: ‘கொள்ளெனக் கொண்டான்’ என்பது.
குறிப்பு: ‘விண்ணென விசைத்தது’ என்பது;
‘துண்ணெனத்
துடித்தது’ என்பதும் அது.
இசை: ‘ஒல்லென ஒலித்தது’ என்பது.
பண்பு: ‘வெள்ளென விளர்த்தது’ என்பது.
எண்: ‘நிலனென வளியென’ என வரும்.
பெயர்: ‘ஊரெனப்படுவது உறையூர்’ என வரும்;
‘நாடெனப்படுவதுசோணாடு’
என்பதும் அது.
254.
என்றென் கிளவியு மதனோ ரற்றே.
வரலாறு:
வினை: ‘கொள்ளென்று கொண்டான்’ என்பது.
குறிப்பு: ‘விண்ணென்று விசைத்தது’ என்பது;
‘துண்ணென்று துடித்தது’ என்பதும் அது.
இசை: ‘ஒல்லென்று
ஒலிக்கும்’ [ஐந்திணையைம் - 28]
என்பது.
பண்பு: ‘வெள்ளென்று விளர்த்தது’ என்பது.
எண்: ‘நிலனென்று வளியென்று’ என வரும்.
பெயர்: ‘ஊரென்று சொல்லப்படுவது உறை
|